ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை தமிழுக்கு மாற்றுவது எப்படி?

ஃபேஸ்புக், மிகவும் பிரபலமான சமூக ஊடக தளம். இது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு கலாச்சாரங்களைக் கடைபிடிக்கும், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களை ஒன்றிணைய அனுமதிக்கும் ஒரு இடமாகும். ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் தளமான இன்ஸ்டாகிராமும் அப்படித்தான். ஆங்கிலம் தெரிந்தால் தான் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும் என்பது இல்லை! இங்கே மொழி ஒரு தடை அல்ல!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டுமே தமிழ் மொழிக்கான ஆதரவை கொண்டுள்ளன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இந்த 2 செயலிகளிலும் (அதாவது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில்) உள்ள ஒரு முக்கியமான செட்டிங்-ஐ பற்றி தெரிந்துகொள்வது மட்டுமே.

அது மொழி தொடர்பான ‘லேங்குவேஜ் செட்டிங்’ ஆகும். இதனை மாற்றி அமைப்பதன் மூலம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள அனைத்து ஆங்கில வார்த்தைகளையும் உங்களால் தமிழ் மொழிக்கு மாற்ற முடியும்! அதெப்படி? முதலில் ஃபேஸ்புக் ஆப்பை தமிழ் மயமாக்குவது எப்படி என்று பார்ப்போம், அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ஆப்பை தமிழ் மொழிக்கு ஆதரவாக மாற்றுவது எப்படி என்றும் பார்க்கலாம்!

ஃபேஸ்புக்

  • உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள ஃபேஸ்புக் ஆப்பை திறக்கவும்.
  • ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகளை (மெனு ஐகானை) கிளிக் செய்யவும்.
  • பின்னர் கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்ய, செட்டிங்ஸ் & ப்ரைவசி (Settings & Privacy) என்கிற விருப்பத்தை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.
  • பின்னர் அதனுள் லேங்குவேஜ் (Language) என்கிற விருப்பத்தை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.
  • அதனுள் கிடைக்கக்கூடிய பல்வேறு மொழி விருப்பங்களில் தமிழ்-ஐ (Tamil) தேடி கண்டுபிடிக்கவும். பின்னர் அதை தேர்வு செய்யவும்.

அவ்வளவு தான்!

இன்ஸ்டாகிராம்

  • உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கவும். பின் உங்கள் ப்ரொஃபைலுக்குள் (Profile) செல்லவும்.
  • இப்போது ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் இருக்கும் மூன்று கிடைமட்ட கோடுகளை (மெனு ஐகானை) கிளிக் செய்யவும்.
  • பின்னர் செட்டிங்ஸ் (Settings) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • அதனை தொடர்ந்து Account (அக்கவுண்ட்) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • அதனுள் லேங்குவேஜ் (Language) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • பிறகு கிடைக்கக்கூடிய பல்வேறு மொழி விருப்பங்களில் தமிழ்-ஐ (Tamil) தேடி கண்டுபிடிக்கவும். பின்னர் அதை தேர்வு செய்யவும்.

அவ்வளவு தான்!

மேலே உள்ள அதே எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், கம்ப்யூட்டர் ப்ரவுஸரில் உள்ள ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் மொழித் தேர்வை மாற்றி, தமிழ் மொழியைத் தேர்வு செய்ய முடியும். மேலும் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் நீங்கள் மாற்றி அமைக்கும் மொழி விருப்பமானது சாதனங்களில் உள்ள மற்ற செயலிகளின் மொழி விருப்பங்களை பாதிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.