புதிய வசதி! 100 போட்டோகளை வாட்ஸப்பில் அனுப்பலாம்.

Highlights

  • வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த புதிய அம்சம் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதியை வழங்குகிறது.

இதுவரை வாட்ஸப்பில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 போட்டோ / வீடியோக்களை மட்டுமே அனுப்ப முடியும். தற்போது வாட்ஸப் தனது புதிய வசதி மூலம் இந்த நிலையை மாற்றி இருக்கிறதுல். அதன்படி இப்போது ஒருவருக்கு ஒரே நேரத்தில் 100 போட்டோகள் அல்லது வீடியோகளை அனுப்பும் வசதியை கொண்டு வந்து இருக்கிறது. இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் கொண்டு வந்திருக்கும் இந்த வசதி விரைவில் ஐபோன் பயர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

நிபந்தனை

முன்னதாக அதிகபட்சமாக 30 போட்டோ / வீடியோக்களை மட்டுமே ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் வழியாக ஒரே நேரத்தில் 100 போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப, ஒரு முக்கியமான முன்நிபந்தனை உள்ளது. அது என்னவென்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் (Latest WhatsApp Version) இருக்க வேண்டும். இல்லையென்றால் இதை செய்ய முடியாது!

ஒருவேளை உங்களிடம் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷ இல்லையென்றால், உடனே கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) சென்று வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

வாட்ஸ்அப் வழியாக 30 க்கும் மேற்பட்ட போட்டோ, வீடியோக்களை அனுப்புவது எப்படி?

  • உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து, 30 க்கும் மேற்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்ப விரும்பும் பெர்சனல் சாட்டிற்குள் (Personal Chat) அல்லது க்ரூப் சாட்டிற்குள் (Group Chat) செல்லவும்.
  • இப்போது டெக்ஸ்ட் பாக்ஸின் (Text Box) இடது பக்கத்தில் உள்ள அட்டாச்மென்ட் (Attachment) அல்லது பேப்பர் கிளிப் (Paper Clip) ஐகானை கிளிக் செய்யவும்.
  • இப்போது கேலரி (Gallery) என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்
  • பின்னர் உங்களுக்கு விருப்பமான 30 க்கும் மேற்பட்ட (அதிகபட்சமாக 100) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தேர்ந்தெடுக்கவும்.
  • அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர், கீழ் வலது மூலையில் உள்ள சென்ட் (Sent) ஐகானை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்!

 

ஒருவேளை இது உங்கள் வாட்ஸ்அப்பில் வேலை செய்யவில்லை என்றால்?

நீங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனைத்தான் பயன்படுத்துகிறீர்கள், ஆனாலும் கூட ஒரே நேரத்தில் 30 க்கும் மேற்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை உங்களால் அனுப்ப முடியவில்லை என்றால்.. கவலைப்பட வேண்டாம்.

குறிப்பிட்ட அம்சத்தை உள்ளடக்கிய வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷன் உங்களுக்கு இன்னும் வந்து சேராமல் இருக்கலாம். இந்த புதிய அம்சம் படிப்படியாகவே வெளியிடப்படுகிறது. இது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களையும் வந்தடைய இன்னும் சிறிது நாட்கள் ஆகலாம்.

எனவே இன்னும் ஓரிரு நாட்களுக்கு பிறகு, வாட்ஸ்அப்பிற்கு லேட்டஸ்ட் வெர்ஷன் வந்துள்ளதா என்பதை சரிபார்க்கவும்; வந்து இருந்தால், அதை உடனே இன்ஸ்டால் செய்து மறுபடியும் முயற்சி செய்து பார்க்கவும்!