Home News ஒன்ப்ளஸ் போனுக்கு அதிரடியாக ரூ.6,000 தள்ளுபடி!

ஒன்ப்ளஸ் போனுக்கு அதிரடியாக ரூ.6,000 தள்ளுபடி!

Highlights
  • OnePlus 11 அறிமுகமாக இருக்கும் நிலையில் OnePlus 10 Pro 5G ஸ்மார்ட்போன் அமேசானில் தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் ரூ.6000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • OnePlus நிறுவனம் OnePlus 11 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் அறிமுகத்தை முன்னிட்டு OnePlus 10 Pro 5G போனுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி & சலுகைகள்

இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 23, 2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் வேரியண்ட்டின் ஒரிஜினல் விலை ரூ.66,999 ஆகவும் 12ஜிபி ரேம் வேரியண்ட்டின் ஒரிஜினல் விலை ரூ.71,999 ஆகவும் இருந்தது.

தற்போது இதில் 7% தள்ளுபடி வழங்கப்பட்டு 8ஜிபி மொபைல் ரூ 61,999 என்ற விலைக்கும், 12ஜிபி மொபைல் ரூ. 66,999 என்ற விலைக்கும் விற்பனை ஆகிறது.

இது தவிர இந்த மொபைலை ஐசிஐசிஐ வங்கி கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.6000 பிளாட் தள்ளுபடியை பெறலாம். இதன் மூலம் இதன் விலையை ரூ.60,999 வரைக் குறைக்கலாம். கூடுதலாக ரூ.22,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர பல கேஷ்பேக் சலுகைகளும் கிடைக்கிறது.

நிறங்கள்

வோல்கானிக் ப்ளாக் மற்றும் எமரால்டு ப்ளாக் ஃபாரஸ்ட் வண்ண விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

டிஸ்ப்ளே

OnePlus 10 Pro 5G ஸ்மார்ட்போனானது 6.7 அங்குல OLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. P3 வண்ணங்களை ஆதரிக்கும் வகையிலான LTPO தொழில்நுட்பம் இதில் இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1440 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ப்ராஸசர்

OnePlus 10 Pro 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

 

மெமரி

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. OnePlus 10 Pro 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேகமாக 48 மெகாபிக்சல் சோனி IMX789 சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. அல்ட்ரா வைட் சென்சாராக 50 மெகாபிக்சல் Samsung ISOCELL JN1 சென்சார் மற்றும் 8 எம்பி டெலிஃபோட்டோ கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் சோனி IMX615 சென்சார் இடம்பெற்றிருக்கிறது.

ப்ராஸசர்

OnePlus 11 5G

முன்பே குறிப்பிட்டது போல் OnePlus 11 5G ஆனது பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் 11 இன் விலை அறிமுகத்திற்கு முன்னதாகவே கசிந்துள்ளது. OnePlus 11 விலை குறித்து பார்க்கையில், OnePlus 11 5G இன் விலை ரூ.55,000 முதல் ரூ.65,000 வரையில் இருக்கலாம். இது ஒன்பிளஸ் 10 ப்ரோவை விட மலிவானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

OnePlus 11 5G அம்சங்கள்

வெளியான தகவலின்படி, OnePlus 11 5G ஆனது 1440 x 3216 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.7 அங்குல AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 50 எம்பி முதன்மை கேமரா, 48 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 32 எம்பி மூன்றாவது நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. செல்பி ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. கிராவிட்டி சென்சார், டிஸ்டன்ஸ் சென்சார், லைட் சென்சார், ஃபேஸ் அன்லாக் அம்சம் போன்ற ஆதரவுகள் இதில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சிப்செட்

OnePlus 11 ஆனது பெயரிடப்படாத octa-core செயலி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் வாட்ஸ் குறித்த விவரங்கள் தெரியவில்லை.