Home News விற்பனைக்கு வந்தது குறைந்த விலை 5ஜி போன்.. லாவா ப்ளேஸ் 5ஜி!

விற்பனைக்கு வந்தது குறைந்த விலை 5ஜி போன்.. லாவா ப்ளேஸ் 5ஜி!

5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்பதால், 5ஜி போன்களின் விற்பனை இந்தியாவில் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஒரு புது 5ஜி ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும் என்றால், அதிகம் செலவு வைக்கிறது. இனி நிலைமை மாறிவிடும். காரணம் Lava நிறுவனம். மலிவு விலையில் Lava நிறுவனம் அதன் Blaze சீரிஸ் வரிசையில் புதிய Lava Blaze 5G என்ற ஸ்மார்ட்போனை ஓரிரு நாட்களில் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. இதன் விலை ரூ.10,000-க்குள் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் Lava Blaze 5G ஆனது கடந்த மாதம் இந்தியா மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்வின் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5G போன் என்று கூறப்படுகிறது. அமேசான் வழியாக இந்தியாவில் இந்த சாதனத்தை நிறுவனம் விற்பனை செய்யும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த Lava Blaze 5G போனின் விற்பனை ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில், இந்த ஸ்மார்ட்போன் உண்மையிலேயே சிறப்பான அம்சங்களோடு வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த போனில் என்ன முக்கியமான அம்சங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.

அம்சங்கள்

இந்த Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.5 அங்குல அளவு கொண்ட HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. செல்ஃபி ஸ்னாப்பருக்கான வாட்டர் டிராப் நாட்ச் உடன் இந்த மொபைல் வருகிறது. இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 7nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பரவலான ஸ்பெக்ஸ்களை இந்த சாதனம் பேக் செய்துள்ளது.

சிறப்பம்சம்

Lava Blaze 5G ஆனது 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 1600 × 720 பிக்சல்கள் உடைய 6.5′ இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் மூலம் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த போன் 3ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் மைக்கோ எஸ்டி கார்டு அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.10,000 விலைக்குள் விர்ச்சுவல் ரேம் கிடைப்பது சிறப்பானது.

கேமரா & பேட்டரி

இந்த போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஸ்டாண்டர்ட் சார்ஜிங் வேகத்தைக் கொண்டிருக்கும். Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் வருகிறது. இதில் டெப்த் ஷூட்டர் மற்றும் மேக்ரோ லென்ஸ் அடங்கும். முன்பக்கத்தில், வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபி எடுக்க 8MP செல்ஃபி ஸ்னாப்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 OS இல் இயங்குகிறது.

கனெக்டிவிட்டி

இணைப்பு அம்சங்களில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C போர்ட் போன்றவற்றை இது ஆதரிக்கிறது. இந்தியாவில் Lava Blaze 5G விலை சுமார் ரூ.10,000 என்ற விலை வரம்பிற்குள் இருக்கும் என கூறப்படுகிறது. இது நீலம் மற்றும் பச்சை நிற விருப்பங்களில் வரும்.