இந்தியன் கேட்ஜெட் அவார்ட்ஸ் 2023 – பிரிவு மற்றும் பரிந்துரை

Highlights

  • 91மொபைல்ஸ் மற்றும் முன்னணி தொழிற்நுட்ப ஊடகவியலாளர்களின் பங்களிப்பில் தொழிற்துறையின் குரலாக ஒலிக்கும் ‘இந்தியன் கேட்ஜெட் அவார்ட்ஸ் 2023’ திருவிழா துவங்கிவிட்டது.
  • ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்தத் திருவிழா இந்த ஆண்டு, பல நிறுவனங்கள் கலந்து கொள்ளும் ‘பெரும்’ விழாவாக நடக்க இருக்கிறது.
  • இந்நிகழ்வின் மூலம் 2023ஆம் ஆண்டில் வெளியான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிப்பெட்டிகள், டெக்அணிகலன்கள் என பல்வேறு வகையான தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்க இருக்கிறோம்.
  • இம்முறை 30+ பிரிவுகளில், 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள்!
  • இதில் சிறந்ததை, 30க்கும் அதிகமான நடுவர்கள், சமூக வலைதள பங்காளர்கள், தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், முன்னணி விமர்சகர்கள் ஒன்றுகூடி தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். இதோடு 100 மில்லியன் பங்கெடுப்பாளரில் ஒருவரான நீங்கள்! ஆமாம், உங்கள் ஒவ்வொருவரின் வாக்கும் கூட சிறந்ததை தேர்ந்தெடுக்கப் போகிறது. எப்படியெனில், இதல் பயனாளர்களின் விருப்ப விருதுகளும் (Users’ Choice awards) வழங்கப்பட இருக்கின்றன.

2023ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/

 

சிறந்த போன் 2023 (ரூ.15,000க்கு கீழ்)

இந்தியாவில் 5ஜி அறிமுகமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது வெளியாகும் மொபைல்கள் பெரும்பாலும் 5ஜி மொபைல்களாகவே உள்ளன. அதுமட்டுமின்றி அவை குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. அதேசமயம் மிட்ரேஞ்ச் மொபைல்களுக்கு சவால் விடும் வகையில் வசதிகளோடு வெளிவருகின்றன. இந்த பட்ஜெட் பிரிவிலும் 3 போன்களைத் தவிர மற்றவை எல்லாமே 5G போன்களாகும். இவற்றில் மிகச்சிறந்த பட்ஜெட் போன் எது என்பதை நாம் தேந்தெடுக்க இருக்கிறோம்.

  •  Infinix Note 30 5G
  • Tecno POVA 5 Pro 5G
  • Realme 11X 5G
  • Redmi 12 5G
  • POCO M6 Pro 5G
  • Samsung Galaxy M14 5G
  • Samsung Galaxy F14 5G
  • itel P55 5G
  • Lava Blaze Pro 5G
  • Moto G14
  • Vivo T2x 5G
  • itel S23+
  • Nokia G42 5G

 

சிறந்த போன் 2023 (ரூ.25,000க்கு கீழ்)

ரூ.15,000 முதல் ரூ.25,000க்கு வரையிலான விலை கொண்ட மொபைல்கள் தான் தற்போது பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கின்றன. ஏனெனில், விலை சற்று அதிகமாக இருந்தாலும், கிட்டத்தட்ட ஃப்ளாக்‌ஷிப் போன்களில் இருக்கும் பெரும்பாலான வசதிகளை இந்த விலைப்பிரிவு மொபைல்களில் எதிர்பார்க்கலாம். இந்த விலைப்பிரிவில் வாடிக்கையாளரை ஒரு நிறுவனம் திருப்திபடுத்திவிட்டால், அதுதான் அவ்வருடத்தின் நம்பர் ஒன் நிறுவனமாக இருக்கும். அதனால் போட்டியும் இந்தப் பிரிவுக்கு கடுமையாகவே இருக்கும்.

  • Tecno Camon 20 Pro 5G
  • POCO X5 Pro 5G
  • Infinix GT 10 Pro
  • Infinix Zero 30 5G
  • iQOO Z7 Pro 5G
  • Motorola Edge 40 Neo
  • Lava Agni 2
  • OnePlus Nord CE 3 Lite 5G
  • Realme 11 Pro 5G
  • Samsung Galaxy M34 5G
  • Samsung Galaxy F34 5G
  • Redmi Note 12 Pro 5G
  • Vivo T2 Pro 5G
  • OPPO A79 5G

 

 சிறந்த போன் 2023 (ரூ. 35,000க்கு கீழ்)

ஃப்ளாக்‌ஷிப் போன் அளவிற்கு செலவு செய்ய விரும்பாத, அதேசமயம் ஃப்ளாக்‌ஷிப் போன்களின் பெரும்பாலான அம்சங்களையும் கொண்ட போன்கள் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரையிலான விலைப்பிரிவில் வெளியாகின்றன. இவை நல்ல சிப்செட், அதிப்படியான ரேம், சிறந்த டிஸ்ப்ளே, தரமான கேமராக்கள் போன்ற பல வசதிகளைக் கொண்டிருக்கும். சிறந்த அம்சங்களைக் கொண்டிருப்பதால் இவை மல்டி-டாஸ்கிங், பெரிய விளையாட்டுகளை கையாள்வது போன்றவற்றை சிறப்பாக செய்யும். அதில் சிறந்த போன் எதுவென்ற போட்டியில் இந்த மொபைல்கள் எல்லாம் களம் இறங்கி உள்ளன.

  • Realme 11 Pro+ 5G
  • Redmi Note 12 Pro+ 5G
  • OnePlus Nord CE3 5G
  • OnePlus Nord 3 5G
  • iQOO Neo 7 Pro
  • Samsung Galaxy F54 5G
  • Motorola Edge 40
  • Samsung Galaxy A34 5G
  • OPPO Reno10 5G
  • Vivo V29
  • POCO F5

 

சிறந்த போன் 2023 (ரூ. 50,000க்கு கீழ்)

‘ஃப்ளாக்‌ஷிப்’ என்ற அடைமொழியில் அழைக்கப்படும் இந்த மொபைல்கள், புதிய தொழில்நுட்பம், மேம்பட்ட பாகங்கள், அதிகபட்ச தரம்.. என, எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சிறந்த போனை இந்த விலைப்பிரிவிலேயே தயாரித்து வைத்திருக்கும். மொபைல் உலகில் புதிதாய் ஒரு வசதியோ, அம்சமோ அறிமுகமானால் அது முதலில் இந்த விலைப்பிரிவு மொபைல்களிலேயே வெளியாகும்.

  • OnePlus 11R 5G
  • OPPO Reno10 Pro 5G
  • Vivo V29 Pro
  • Nothing Phone (2)
  • Honor 90
  • Samsung Galaxy A54 5G
  • Samsung Galaxy S21 FE 5G (2023)
  • Google Pixel 7a
  • Tecno Phantom X2 Pro 5G

 

சிறந்த செஃல்பி போன் 2023 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ.35,000க்கு கீழ்)

முன்பு செல்ஃபி எடுக்க அதிகம் பயன்பட்ட முன்பக்க கேமரா, தற்போது அலுவல் சார்ந்தும், இணைய கல்வி சார்ந்துமாக அவசிய தேவையாகிவிட்டது. அதனால் தற்போது மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் முன்பக்க கேமராவையும் அதிக மெகாபிக்சல்கள், அதிக வசதிகளோடு தரமாக தயாரித்து வெளியிடுகின்றன. அப்படி 2023 ஆம் ஆண்டு மக்களால் அதிக வரவேற்பு அளிக்கப்பட்ட இந்த மொபைல்களில் சிறந்த செல்ஃபி போன் எதுவென பார்க்கலாம்.

  •  Realme 11 Pro+ 5G
  • OnePlus Nord 3 5G
  • Samsung Galaxy F54 5G
  • Vivo V29
  • Vivo V29e
  • OPPO Reno10 5G
  • Redmi Note 12 Pro+ 5G
  • iQOO Neo 7 Pro
  • Motorola Edge 40
  • Infinix Zero 30 5G
  • POCO F5
  • POCO X5 Pro 5G

 

சிறந்த கேமரா போன் 2023 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ. 35,000க்கு கீழ்)

மொபைலில்  ஒரு அம்சமாக இருந்த ‘கேமரா’ தற்போது பலகட்ட வளர்ச்சி அடைந்துவிட்டது. பட்ஜெட் போன்கள் கூட 50MP கேமராக்களோடு வருகின்றன. அதுபோல் புகைப்படங்களை நல்ல ‘டெப்த்’ உடன் எடுக்க கூடுதலாக சென்சார் மற்றும் சாப்ட்வேர்களுடன் வருகின்றன. அதில் மக்களின் மனம் கவர்ந்த சிறந்த கேமரா போன் எது என்பதை தேர்வு செய்ய இருக்கிறோம்.

  • Realme 11 Pro+ 5G
  • OnePlus Nord 3 5G
  • Samsung Galaxy F54 5G
  • Vivo V29
  • Vivo V29e
  • OPPO Reno10 5G
  • Redmi Note 12 Pro + 5G
  • iQOO Neo 7 Pro
  • Motorola Edge 40
  • Infinix Zero 30 5G
  • POCO X5 Pro 5G
  • Tecno Camon 20 Premier 5G

 

சிறந்த கேமரா போன் 2023 – ப்ரீமியம் (விலை பொருட்டல்ல)

தொழிற்முறை கேமராக்களில் இருக்கும் வசதிகள் தற்போது மொபைலுக்கும் வர ஆரம்பித்துவிட்டன. நடுக்கமின்றி எடுக்க OIS வசதி, பெரிய அளவிலான படங்களை எடுக்க 200MP வரையிலான சென்சார்கள்,  குறைந்த வெளிச்சத்தில் கூட நன்றாக எடுக்க வேண்டி அளவில் 1 அங்குல அளவிலான பெரிய சென்சார், வெவ்வேறு தூரங்களை எடுக்க பலவிதமான ஃபோகல்லெந்த் (Focal lenth) கொண்ட பலவகை சென்சார்கள் என பலவகையான வசதிகளோடு தற்போதைய கேமரா போன்கள் வெளியாகி வருகின்றன. இவற்றில் சிறந்த ப்ரீமியம் வகை கேமரா போன் எதுவென முடிவெடுக்க இருக்கிறோம்.

  • Samsung Galaxy S23 Ultra
  • Apple iPhone 15 Pro Max
  • Google Pixel 8 Pro
  • Vivo X90 Pro
  • OnePlus 11 5G
  • iQOO 11 5G
  • OPPO Reno10 Pro+ 5G
  • Xiaomi 13 Pro 5G
  • Vivo V29 Pro
  • Honor 90
  • OPPO Find N3 Flip
  • OnePlus Open

 

சிறந்த கேமிங் போன் 2023 – மெயின்ஸ்ட்ரீம் (ரூ.35,000க்கு கீழ்)

எல்லா போன்களிலும் விளையாட்டுகளை விளையாட முடியுமென்றாலும், அளவில் பெரிய விளையாட்டுகளை தடையின்றி எளிதாக விளையாட பிரத்யேக மொபைல்களால் தேவைப்படுகின்றன. ஆனால், விளையாட்டுக்கென பிரத்யேக மொபைலை வாங்க விரும்பாத, அதேசமயம் விளையாடுவதிலும் ஆர்வமுள்ளவர்கள் என ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களுக்கான பிரிவுதான் இது. இதில் பொதுவான மொபைல் பயன்பாட்டோடு கேமிங்கிற்குத் தேவைப்படும், கூடுதல் ரேம், நல்ல சிப்செட் போன்ற சில அம்சங்களுடன் வெளியான மொபைல்கள் இடம்பெற்றுள்ளன.

  • iQOO Neo 7 Pro 5G
  • OnePlus Nord 3 5G
  • Infinix GT 10 Pro
  • Motorola Edge 40
  • POCO F5
  • Redmi Note 12 Pro + 5G
  • Realme 11 Pro + 5G

 

சிறந்த கேமிங் போன் 2023 – ப்ரீமியம் (விலை பொருட்டல்ல)

மொபைலில் பெரிய விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கென பிரத்யேகமான மொபைல்கள் கூட வரத் தொடங்கிவிட்டன. இவற்றில் கூடுதல் ரேம், சிறந்த ப்ராசஸர், கூலிங் வசதி போன்றவை உள்ளன. இதன் மூலம் சிறந்த கேமிங் அனுபவத்தைப் பெற முடியும். இது தவிர சிறந்த திரை அனுபவம், பெரிய பேட்டரி, சரவுண்ட் ஆடியோ போன்ற மிகச்சிறந்த வசதிகளோடு வரும் கேமிங் போன்களில் சிறந்தது எதுவென பார்க்க இருக்கிறோம்.

  •  Samsung Galaxy S23 Ultra
  • Google Pixel 8 Pro
  • Apple iPhone 15 Pro Max
  • Vivo X90 Pro
  • OnePlus 11 5G
  • iQOO 11 5G
  • ASUS ROG Phone 7 Ultimate
  • OnePlus 11R 5G

 

சிறந்த ஃபோல்ட் / ஃப்ளிப் போன் 2023

சென்ற வருடம் இல்லாத புது பிரிவு இது. ஒவ்வொரு சில வருடங்களிலும் மொபைலில் சில விஷயங்கள்  பிரபலமாகும். அப்படி தற்போது மக்களிடையே பிரபலமாகி வரும் புதிய பிரிவுதான் இந்த ஃப்ளிப் மற்றும் ஃபோல்ட் போன்கள். மொபைலை மடிப்பது என்பது இரண்டு வகைகளில் இருக்கிறது. ஃப்ளிப் போன்கள் தற்போதைய போன்களை பாதியாக மடக்கி வைப்பது. ஃபோல்ட் என்பது. தற்போது இருக்கும் போன்களை விட இரண்டு மடங்கு இருக்கும் போன்களை மடக்கி இப்போது இருக்கும் போனின் அளவுக்கு கொண்டு வருவது. இதில் சிறந்தது எதுவென்ற போட்டிக்கு சில போன்கள் பட்டியலாகி உள்ளன.

  • Tecno Phantom V Fold 5G
  • Tecno Phantom V Flip 5G
  • Motorola Razr 40
  • Motorola Razr 40 Ultra
  • Samsung Galaxy Z Fold5
  • Samsung Galaxy Z Flip5
  • OPPO Find N3 Flip
  • OnePlus Open

 

2023 ஆம் ஆண்டின் சிறந்த போன்

ஒரு மொபைலை சிறந்ததெனக் கூற, அதன் விலை, வசதிகள், கேமரா திறன், சிறந்த அம்சங்கள், தொடர்ச்சியான அப்டேட்கள்,  யூசர் ப்ரெண்ட்லி என பலவகையான காரணிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவர்களின் தேவையோ ஒரே ஒரு மொபைல் தான். எனவே எல்லாவற்றிலும்.. அல்லது மேற்கண்டவற்றில் பெரும்பாலான அம்சங்களைக் கொண்ட ஒரு மொபைலைக் கண்டறிந்து வாங்கவே விரும்புவோம். அப்படி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த 2023 ஆம் வருடத்தின் மிகச் சிறந்த மொபைல் எதுவென்று அலசும் முயற்சி தான் இது.

  • Samsung Galaxy S23 Ultra
  • Google Pixel 8 Pro
  • Apple iPhone 15 Pro Max
  • Vivo X90 Pro
  • Xiaomi 13 Pro 5G
  • Samsung Galaxy Z Fold5
  • Samsung Galaxy Z Flip5
  • OnePlus 11 5G
  • iQOO 11 5G
  • OPPO Reno10 Pro+ 5G
  • OPPO Find N3 Flip
  • OnePlus Open
  • Tecno Phantom V Fold 5G
  • Motorola Razr 40 Ultra

சிறந்ததை தேர்ந்தெடுக்கவும், மேலும் விவரங்களை அறிந்துகொள்ளவும் மேலே வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை ‘க்ளிக்’ செய்யவும்.