Home News 32 அங்குல டிவி ரூ99 மட்டுமே!

32 அங்குல டிவி ரூ99 மட்டுமே!


பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சிறந்து விளங்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் Y1 என்கிற பெயரில் மலிவு விலை ஸ்மார்ட்டிவியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது.

இது ஒரு 32 அங்குல ஸ்மார்ட்டிவி ஆகும். பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று இருக்கின்றன.

இதுதவிர 20W டால்பி ஸ்டீரியோ (Dolby stereo) ஸ்பீக்கர்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது. 32 அங்குல LED திரை, குவாட்கோர் புராசஸர் (Quadcore processer), 512MB RAM, 4 GB சேமிப்புத் திறன், லினக்ஸ் இயங்குதளம் என எண்ணற்ற அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்டிவிக்கு ஒருவருட வாரண்டியும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த இன்பினிக்ஸ் Y1 ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி வாங்குபவர்களுக்கு இந்த டிவி ரூ.8,099 ரூபாய்க்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி பழைய டிவிக்கு அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ் சலுகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அப்படி எக்ஸ்சேஞ் செய்து வாங்குபவர்கள் இந்த டிவியை வெறும் ரூ.99க்கும் வாங்கிச் செல்லலாம். இனிபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த Y1 என்கிற 32 அங்குல ஸ்மார்ட்டிவி வருகிற ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.