டிச. 1ல் வருகிறது இன்பினிக்ஸின் முதல் குறைந்தவிலை 5ஜி போன்

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் Infinix Hot 20 5G என்ற அதன் முதல் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் (5G smartphone) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதன் விற்பனையையும் துவங்கவுள்ளது. இந்த மொபைலை பிளிப்கார்ட் வழியாக வாங்க முடியும்.

Infinix Hot 20 5G

இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் 5ஜி இணக்கத்துடன் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக மாறப்போகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது கடந்த அக்டோபர் மாதம் உலக சந்தையில் அறிமுகம் ஆனது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்தியாவில் வெளியாக இருக்கிறது.

குறைந்த விலை

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக ஹாட் சீரிஸ் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நிறுவனம் Infinix Hot 20 Play மாடலையும் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இப்போது மக்களின் கவனம் 5ஜி சாதனங்கள் மீது இருப்பதனால், நிறுவனம் Infinix Hot 20 5G போனை முதலில் வெளியிடுகிறது.

எப்போது கிடைக்கும்?

இந்த Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் கிடைக்கும் என்பதை இன்பினிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல், பிளிப்கார்ட் நிறுவனத்தின் போஸ்டர் தகவல்களும் இதன் அறிமுகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்போது இந்த Infinix Hot 20 5G போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

என்ன விலை

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது 12 5ஜி பேண்ட்களை ஆதரிக்கும் அம்சத்துடன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, இன்பினிக்ஸ் ஹாட் சீரிஸ் மாடல்கள் ரூ. 12,000 விலை பிரிவில் வருகிறது. ஆனால், இது 5ஜி போன் என்பதனால் வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்

Infinix Hot 20 5G ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே பேனலைக் கொண்டுள்ளது. இது 6.6 அங்குல முழு HD+ தெளிவுத்திறனை ஆதரிக்கிறது. இது 1900:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவை கொண்டுள்ளது மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட செல்ஃபி ஷூட்டரை கொண்டுள்ளது.

சிப்செட் & ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட்டைக் கொண்டுள்ளது. Dimensity 810 அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட Mali G57 GPU, 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இதன் சேமிப்புத்திறனை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், இது 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்ட XOS 10.6 உடன் இயங்குகிறது.

கேமரா & பேட்டரி

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா மற்றும் 2MP சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது சூப்பர் நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட் போன்ற பல்வேறு கேமரா அம்சங்களை ஆதரிக்கிறது. இது செல்ஃபிக்கு 8MP ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

விலை என்ன?

Infinix Hot 20 5G ஆனது ஸ்பேஸ் ப்ளூ, பிளாஸ்டர் கிரீன் மற்றும் ரேசிங் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. பாதுகாப்புக்கென, இதில் பவர் பட்டனில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை கொண்டுள்ளது. இது 4ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் தோராயமாக ரூ. 14,000 என்ற விலையில் கிடைக்கும் எனத் தெரிகிறது.