இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் (infinix hot 20) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பிலிப்பைன்ஸில் இந்த போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்ப்ளே
இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் போன் 6.78 அங்குல ஃபுல் எச்டி பிளஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிப்செட்
இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதி உள்ளது. இப்போது வரும் பட்ஜெட் விலை போன்களில் அதிகம் இடம்பெறுவது இந்த சிப்செட் வசதி தான். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ். மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா
புதிய இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவே செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.
மெமரி
இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இருக்கிறது.
பேட்டரி
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.
4ஜி அல்லது 5ஜி?
இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களுமே அருமையாகத் தான் உள்ளது. ஆனால் முக்கியமான வசதி இதில் இல்லை. அதாவது 5ஜி வசதி இந்த ஸ்மார்ட்போனில் இல்லை. 4ஜி வசதியுடன் தான் இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது வரும் பட்ஜெட் விலை போன்களில் கூட 5ஜி சேவை உள்ளது. ஆனால் இந்த போனில் இல்லை என்பது மிகப் பெரிய வருத்தம்.
கனெக்டிவிட்டி
4ஜி, வைஃபை 802.11, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் கருப்பு, நீலம், ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 20 எஸ் ஸ்மார்ட்போன் PHP 8,499 (இந்திய மதிப்பில் ரூ.12,200) என்ற விலைக்கு அறிமுகமாகி இருக்கிறது.






