Infinix Hot 30i மொபைல் இந்தியாவில் மார்ச் 27 அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சீனாவின் ட்ரான்ஷன் ஹோல்டிங்ஸிற்கு சொந்தமான இன்ஃபினிக்ஸ் பிராண்ட் இந்த ஸ்மார்ட்போனின் படங்களைப் பகிர்ந்துள்ளது. இது அந்த மொபைலின் தோற்றம் மற்றும் பின்புற கேமராத் தொகுதியை வெளிப்படுத்துகிறது. Infinix Hot 30i ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இது டயமண்ட் ஒயிட், கிளேசியர் ப்ளூ மற்றும் மிரர் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியாகி இருக்கும் ரெண்டர்கள் மொபைல் லெதர் ஃபினிஷிங் உடன் இருப்பதாகக் காட்டுகின்றன. Infinix Hot 30i இன் டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு விகிதத்தை வழங்குவதற்காக டீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைலானது 16ஜிபி வரையிலான ரேம்-ஐக் கொண்டு இருக்கும் எனத் தெரிகிறது.
மெமரி
Infinix, நேற்று அதன் இணையதளத்தின் ஒரு பிரத்யேக லேண்டிங் பக்கம் வழியாக, ஒரு செய்திக்குறிப்போடு, Infinix Hot 30i மொபைலின் இந்திய வெளியீட்டை டீஸ் செய்துள்ளது. டீசரின் படி, வரவிருக்கும் போன் 16 ஜிபி ரேம் வரை பேக் செய்யும். ஆனால் எவ்வளவு சேமிப்புத்திறன் இருக்கும் என்பது வெளியாக வில்லை. பட்ஜெட் போனாக இருப்பதால் இதில் 64ஜிபி அல்லது 128ஜிபி இருக்க வாய்ப்புள்ளது. அதே போல் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கவும் வாய்ப்பு இருக்கிறது.
நிறங்கள்
Infinix Hot 30i இன் வெளியீட்டை உறுதிப்படுத்தியது. இந்த மொபைலின் அறிமுகம் மார்ச் 27 அன்று நடைபெறும். இந்த ஸ்மார்ட்போன் டயமண்ட் ஒயிட், கிளேசியர் ப்ளூ மற்றும் கண்ணாடி போன்ற பூச்சு கொண்ட மிரர் பிளாக் என மூன்று வண்ண விருப்பங்களில் அறிமுகமாகிறது. இருப்பினும், Infinix Hot 30i இன் வெளியீட்டு நிகழ்வின் நேரம் மற்றும் விலை விவரங்களை இன்னும் வெளியிட வில்லை.

கேமரா
குறிப்பிட்டுள்ளபடி, Infinix ஆல் பகிரப்பட்ட படங்கள், Infinix Hot 30i மொபைலானது இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று கூறுகின்றன. இதன் பின்பக்க பேனல் தோல் போன்ற வடிவமைப்பில் காட்டப்பட்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய லிக்விட் டிஸ்ப்ளேவைக் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் டீஸ் செய்யப்பட்டுள்ளது. கூடவே, பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிப்செட்
Infinix Hot 30i பட்ஜெட் மொபைலாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6.6 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். மேலும் இது மீடியாடெக் ஹீலியோ ஜி37 SoC மூலம் இயக்கப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. இது பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் 6,000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கலாம். இதனை சார்ஜ் செய்ய எத்தனை வாட்ஸ் சார்ஜரிங் வசதி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடப்படவில்லை.
இணையதளம்: https://hot30i.infinixmobiles.in/







