
கடந்த மாதம் இன்பினிக்ஸ் நிறுவனம் infinix inBook X1 slim என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது இன்புக் எக்ஸ் 1 நியோ என்கிற புதிய மாடலை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இது விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் வருகிறது. அலுமினியம் அலாய் மெட்டல் பாடியை கொண்டுள்ள இந்த லேப்டாப், 14 அங்குல Full HD IPS திரையுடன் வருகிறது. 8GB RAM மற்றும் 256GB சேமிப்புத்திறன் கொண்டுள்ள இந்த லேப்டாப்பில் DTS Audio processing வசதியும் இருக்கிறது. கூடவே இரண்டு மைக்ரோ போன்களும் இருக்கிறது.
இந்த லேப்டாப்பில் இண்டெல் அல்ட்ரா ஹெச்.டி கிராபிக்ஸ் கார்டும் (Intel ultra HD Graphics card) இடம்பெற்று உள்ளது. 50 வாட் ஹவர் பேட்டரியுடன் வரும் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 1 நியோ லேப்டாப்பில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இதன் விலை ரூ.24,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும் ஜூலை 21-ந் தேதி முதல் இந்த லேப்டாப் ப்ளிப்கார்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.





