108MP கேமராவுடன் விற்பனைக்கு வருகிறது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4G

ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை?

இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் 12,000 ரூபாயில் இருந்து 13,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

டிஸ்பிளே

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 6.7-அங்குல Full HD Plus AMOLED டிஸ்பிளே உள்ளது. 2400 x 1080 பிக்சல்ஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாதுகாப்புக்கு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 20:9 ரேஷியோ போன்ற பல அசத்தலான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரேம் வசதி

அதேபோல் இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறனையும் கொண்டு இருக்கிறது. இந்த மொபைலின் சேமிப்புத்திறனை இன்னும் அதிகரித்துக்கொள்ள ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

கேமரா

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 108 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 2 மெகா பிக்சல் டெப்த் லென்ஸ் + 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ் என பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16 மெகா பிக்சல் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் மீடியாடெக் ஜி99 சிப்செட் வசதியைக் கொண்டு இருக்கிறது. இதனால் இந்த போன் தடையற்ற கேமிங் அனுபவத்தை வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, என்எப்சி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், USB-C போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி போன். இதனால், இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.