Home News Google Play Console பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் Infinix Note 30 முக்கிய விவரக்குறிப்புகள் தெரியவந்தன.

Google Play Console பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் Infinix Note 30 முக்கிய விவரக்குறிப்புகள் தெரியவந்தன.

Highlights
  • Infinix Note 30 கூகுள் ப்ளே கன்சோலில் தோன்றியதால் விரைவில் வெளியாகலாம்
  • இதில் Helio G99 சிப்செட் மற்றும் 8 GB RAM உள்ளது
  • இந்த மொபைல் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது

 

Infinix Note 30 விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் ப்ளே கன்சோலின் தரவுத்தளத்தில் தோன்றியதே இதற்குக் காரணம். வழக்கம் போல், பட்டியல் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் மொபைலின் படத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் சில விஷயங்கள் நமக்குத் தெரிய வருகிறது. இதுவரை மொபைல் பற்றி அறியப்பட்ட அனைத்து விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.

டிஸ்ப்ளே

Infinix Note 30 மொபைலின் டிஸ்ப்ளே 20.5:9 விகிதத்துடன் 1080 x 2460 பிக்சல் அடர்த்தியோடு இருக்கும் என்பதை Google Play கன்சோல் பட்டியல் வெளிப்படுத்துகிறது. பட்டியலில் உள்ள மொபைலின் படம், அது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

 

சிப்செட் & மெமரி

இந்த மொபைல் Helio G99 சிப்செட் மற்றும் 8 GB RAM உடன் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும். இதன் மீது நிறுவனத்தின் XOS UI ஸ்கின் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

X6833B என்ற மாடல் எண்ணோடு வரும் இன்ஃபினிக்ஸ் நோட் 30, அக்டோபரில் அறிமுகமான Infinix Note 12 (2023) மொபைலுக்கு மாற்றாக இருக்கும். இது 6.71 அங்குல AMOLED டிஸ்ப்ளேவுடன் வந்தது. இது முழு HD+ தெளிவுத்திறனை வழங்குகிறது மற்றும் Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி சேமிப்பகத்தை வழங்கியது. இது Android 12 OS இயங்குதளத்தின் மேல் XOS 10.6 ஸ்கின் கஸ்டமைஸ் செய்யப்பட்டு வெளியானது.

நோட் 12 ஆனது 16 மெகாபிக்சல் முன்பாக செல்ஃபி கேமராவைக் கொண்டிருந்தது. அதன் பின்பக்க பேனலில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவை இடம்பெற்று இருந்தன. இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டு கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

 

Infinix Note 30 வரிசை பல மாடல்களைக் கொண்டிருக்கும். அவற்றில் ஒன்று Infinix Note 30 VIP (மாடல் எண் X6710) ஆகும், இது கடந்த மாதம் புளூடூத் SIG இல் காணப்பட்டது. இதுவரை, VIP சாதனம் புளூடூத் 5.3, 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.