
Infinix smart 6 plus ஸ்மார்ட்போனின் அம்சங்களும், டிசைன் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர்டிராப் நாட்ச் (waterdrop notch) டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6-ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமானதால் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இதன் அடுத்த பதிப்பான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 ப்ளஸ் மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் தயாராகி உள்ளது. இதற்கான மைக்ரோசைட்டும் ப்ளிப்கார்ட் தளத்தில் நேரலைக்கு வந்துள்ளது. இதன்மூலம், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும், டிசைன் பற்றிய விவரங்களும் தெரியவந்துள்ளன.
அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீனில் இரண்டு பிளாஷ்கள் இடம்பெற்று இருக்கின்றன. பின்புறம் டூயல் கேமரா செட் அப் இடம்பெற்று இருக்கிறது. அதுமட்டுமின்றி கைரேகை சென்சாரும் (finger print sensor) பின்பக்கத்திலேயே இருக்கிறது.
இந்த Infinix smart 6 plus ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின் மேல் infinixன் Android Go Ui பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. Quad core, 2GHz, Cortex A53 ப்ராஸசரான MediaTek Helio A22 பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். இரட்டை சிம் கொண்ட மொபைலான இது ஒரு 4ஜி மொபைல் ஆகும். இந்த மொபைலில் 32GB சேமிப்புத்திறன் உள்ளது. இதனை மைக்ரோ SD கார்டு மூலம் 128GB வரையில் அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும். செயலிகளை இயக்க 2GB RAM வழங்கப்பட்டுள்ளது.
மொபைலின் பின்பக்கத்தில் 8 மெகாபிக்சல் மற்றும் 0.8 மெகாபிக்சல் கேமராக்களும் இருக்கின்றன. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கும் எனத் தெரிகிறது. இதன்மூலம் செல்ஃபி புகைப்படங்களையும் வீடியோ கால்களையும் மேற்கொள்ள முடியும். இதன் பின்பக்க கேமராவில் டிஜிட்டல் ஜூம், ஆட்டோ ஃப்ளாஷ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதன் பிக்சல் அடர்த்தி 266 ppi. இதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் 3264 x 2448 Pixels அளவைக் கொண்டு இருக்கும்.
இத்துடன் இந்த Infinix Smart 6 Plus ஸ்மார்ட்போனில் WiFi – 802.11, b/g/n, Mobile Hotspot மற்றும் இந்தியன் பேண்ட்களுக்கான 4G, 3G, 2G நெட்வொர்க் வசதியும் இருக்கின்றன். இதுதவிர, Light sensor, Proximity sensor, Accelerometer போன்ற அம்சங்களும் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
Infinix Smart 6 Plus ஸ்மார்ட்போன் Light Sea Green, Ocean Blue, Polar Black, Purple ஆகிய நிறங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 720 x 1600 pixel resolution உடன் கூடிய 6.6 அங்குல HD plus வாட்டர்டிராப் நாட்ச் (waterdrop notch) IPS LCD டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி 5,000 mAh லித்தியம் பாலிமர் பேட்டரியும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 29-ந் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. இதன் விலை ரூ10,790 ஆக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
