
இந்தியாவில் சாம்சங்கின் எம்-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமானது. திறன்மிக்க பேட்டரி ஸ்மார்ட்போனான Samsung Galaxy M32 புதிய பிரைம் பதிப்பு Amazon India இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக மறு அறிமுகம ஆகி இருக்கும் இந்த Galaxy M32 Prime Edition-ஐ தற்போது பெரும் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.
அமேசான் ப்ரைம்
புதிய கேலக்ஸி எம்32 பிரைம் எடிஷனின் வசதிகள் வழக்கமான கேலக்ஸி எம்32 போலவே இருக்கும். ஆனால் இதன் மூலம் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் இலவசமாகக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மூலம், நிறுவனம் மூன்று மாத பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது. இருப்பினும் இந்த சலுகை ஏற்கனவே பிரைம் உறுப்பினர்களாக இல்லாத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
விலை
சாம்சங் கேலக்ஸி எம்32 பிரைம் எடிஷனை இரண்டு வகைகளில் கொண்டு வந்துள்ளது சாம்சங். இதில் முதலில் 4ஜிபி + 64ஜிபி சேமிப்பகமும், இரண்டாவதாக 6ஜிபி + 128ஜிபி சேமிப்பகமும் கிடைக்கும். இந்த இரண்டு வகைகளின் விலை முறையே ரூ.11,499 மற்றும் ரூ.13,499. பிரைம் பிளாக் (கருப்பு) மற்றும் ப்ளூ (நீல) நிறங்களில் கிடைக்கின்றன.
சலுகை
இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி தொலைபேசியை வாங்குவதற்கும், EMI மூலம் பணம் செலுத்துவதற்கும் ரூ.1,500 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையின் மூலம், கேலக்ஸி M32ன் 4ஜிபி + 64ஜிபி வேரியண்டை ரூ.10,999 என்ற விலைக்கும், 6ஜிபி + 128ஜிபி வேரியண்டை ரூ.12,999 என்ற விலைக்கும் வாங்க முடியும்.
சிறப்பம்சங்கள்
Galaxy M32 Prime Edition ஆனது Infinity-U நாட்ச் உடன் 6.4 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 90Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்கும் இந்த டிஸ்ப்ளே 800nits பிரகாசம் மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த மொபைலின் மிகச் சிறந்த விஷயமாக இதன் பேட்டரியைக் குறிப்பிடலாம். ஏனெனில் இதில் 6,000mAh பேட்டரி 18W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதனால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இதனோடு ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரையும் கொண்டிருக்கிறது.
கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளவும் 20MP செல்ஃபி கேமரா உள்ளது. அதே நேரத்தில், பின்புற பேனலில் 64MP பிரதான கேமரா சென்சார் தவிர, 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன.
சிப்செட் & இயங்குதளம்
Android 12 அடிப்படையிலான OneUI 4.1 இயங்குதளத்தில் இந்த மொபைல் இயங்குகிறது. இந்த Galaxy M32 Prime Edition போனில் MediaTek Helio G80 சிப்செட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் சேமிப்புத்திறனை ஒரு micro SD கார்டு மூலம் 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.
கனெக்டிவிட்டி
இது ஒரு இரட்டை சிம் போன் ஆகும். இது 196 கிராம் எடையைக் கொண்டு இருக்கிறது. இதில் 3.5mm ஆடியோ ஜாக், ப்ளூடூத், டால்பி அட்மாஸ் போன்ற பல வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றது.