ஐபோனுக்கு போட்டியாகுமா Samsung Galaxy Z Flip 4?


இன்று நடைபெற்ற Galaxy Unpacked நிகழ்வில் சாம்சங் நிறுவனம் புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 (Samsung Galaxy Z Flip 4) போனை அறிமுகம் செய்து இருக்கிறது. ஐபோன் பிரியர்களே பொறாமைப்படும் அளவுக்கு இந்த கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி சர்வதேச சச்தையில் இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதை சாம்சங் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனின் ஆரம்ப விலை $999 (இந்திய மதிப்பில் ரூ.79,000) ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் ப்ளூ, போரா பர்பில், கிராஃபைட் மற்றும் பிங்க் கோல்ட் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் ஆனது 6.7-அங்குல முதன்மை Full HD plus Dynamic AMOLED 2X Infinity Flexடிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 22:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ போன்ற சிறப்பான அம்சங்களை இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் கொண்டுள்ளது. இந்த பிரைமரி டிஸ்பிளேவைத் தவிர கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 1.9- அங்குல Super AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. இது 260 x 512 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த அவுட்டர் டிஸ்ப்ளே மூலம் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 4nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 + ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. மேலும் OneUI 4.1.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனம், இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் 12எம்பி அல்ட்ரா வைடு பிரைமரி சென்சார் ( f/2.2) + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் ( f/1.8) என்கிறடூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த போனில் ஹேண்ட்ஸ்ஃப்ரீ (Handsfree) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க FlexCam அம்சத்தை சாம்சங் வழங்கியுள்ளது. மேலும் புதிய சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி சேமிப்புத்திறனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போனில் 3700mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போன் 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும். குறிப்பாக ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆகியவற்றை இந்த போன் ஆதரிக்கிறது.

5G, 4G எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் v5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 போன் மாடல். இந்த போனின் எடை 187 கிராம் இருக்கும் எனத் தெரிகிறது.