ஐபோன் 14ல் என்னென்ன புதுசு?


ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யவிருக்கும் iPhone 14 சீரிஸில் புதிய சில மாற்றங்களைச் செய்ய இருக்கிறது.

iPhone 14 வரிசையில் என்னென்ன மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது?

Apple நிறுவனம் அதன் ஐபோன் சீரிஸ் வரிசையில் அடுத்த மாதம் களமிறக்கத் தயாராக இருக்கும் புதிய ஐபோன் சீரிஸ் மாடல் தான் இந்த ‘ஐபோன் 14’ (iPhone 14). இந்த வரிசையில், ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கிறது. இவற்றை செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ போன்களின் நிறங்கள் தற்போது ஆன்லைனில் லீக் ஆகி இருக்கிறது. ஐபோன் 14 மாடல் இந்த முறை ஆறு வண்ண விருப்பங்களுடன் வரும் என்றும், ஐபோன் 14 ப்ரோ மாடல் ஐந்து வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் ஒரு டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த வெவ்வேறு நிறங்களில் ஒன்று ‘பர்பிள்’ (Purple) நிறமாக இருக்கும் என்றும் அந்த டிப்ஸ்டர் தெரிவித்திருக்கிறார்.

ஐபோன் 14 மாடல்களில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

ஐபோன் 14 சீரிஸ் 30W வயர்டு சார்ஜிங்குடன் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த புதிய ஐபோன் 14 மாடல் சாதனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய A16 பயோனிக் சிப்செட் உடன் வெளிவரும் என்றும் தெரிய வருகிறது. அதேபோல், இந்த ஐபோனில் இருக்கும் ஹீட் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே, ஐபோனில் பயன்படுத்தப்படும் பொருட்கள், Face ID தொழில்நுட்பம், Gorilla Glass Victus மற்றும் MagSafe பேட்டரி பற்றிய குறிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஐபோன் 14 வரிசையில் எந்தெந்த மாடல்களில் இந்த நிறம் கிடைக்கும்?

டிப்ஸ்டர் ஜியோரிகு வெளியிட்ட அறிவிப்பின் படி, ஐபோன் 14 கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் ஊதா வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் ஐபோன் 13ல் வந்த பிங்க் நிறம் இப்போது ஐபோன் 14 வரிசையில் பர்பிள் நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல் ஐபோன் 14 ப்ரோவைப் பொறுத்தவரை, இந்த போன் கோல்டு, கிராஃபைட், பச்சை, ஊதா மற்றும் வெள்ளை நிறங்களில் வரும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு முன் வந்த ஐபோன் 13 ப்ரோ மாடலில் வழங்கப்பட சியரா ப்ளூ நிறத்திற்கு பதில் ஊதா நிறத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

வித்தியாசமான பஞ்ச் ஹோல் கட் அவுட்!

ஆப்பிளின் புதிய ஐபோன் 14 மாடல்கள் 30W சார்ஜிங்கிற்கான ஆதரவைப் பெறும் என்று டிப்ஸ்டர் கூறுகிறார். கடந்த ஆண்டு இருந்த அதே பாடி வடிவமைப்பு, ஸ்டோரேஜ் விருப்பங்கள், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு மற்றும் பெரிய மற்றும் கனமான MagSafe பேட்டரி போன்றவற்றை நாம் இந்த புதிய மாடலிலும் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 14 இன் பஞ்ச் ஹோல் கட் அவுட்கள் “எதிர்பார்த்தது போல் வித்தியாசமாகத் தெரிகிறது”, என்று அவர் கூறியிருக்கிறார்.

வரவிருக்கும் புதிய ஐபோன்களில் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம் எதிர்பார்க்கப்படுகிறது. A15 பயோனிக் சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அதே 5nm உற்பத்தி செயல்முறையைப் பயன்படுத்தும் A16 Bionic சிப்செட் பற்றிய சில குறிப்புகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது. Ming-Chi Kuo என்ற ஆய்வாளரின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட A16 சிப்செட்கள், தற்போதுள்ள A15 Bonic ஐ விட அதிக செயல்திறன் ஊக்கத்தை வழங்கும் என்று அவர் நம்பிக்கை கூறியுள்ளார்.

iPhone 14 இன் விலை தோராயமாக ரூ. 63,200 என்ற விலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது iPhone 13 அறிமுகமான அதே விலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஐபோன் 14 தொடர் வெளியீட்டு நிகழ்வை நடத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 உள்ளிட்ட பிற சாதனங்களின் வெளியீட்டையும் எதிர்பார்க்கலாம்.