
ஆப்பிளுடைய சமீபத்திய அறிமுகமான ஐபோன் 14 சீரிஸ் போன்களுக்கு உலகளவில் எவ்வளவு எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தது என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இந்த போனை வாங்க பலர் ஆசைப்பட்டாலும், இதன் விலை அதிகமாக இருந்தது.
விலை காரணமாக ஆப்பிளின் ஐபோன் 14ஐ வாங்க தயக்கம் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த குட் நியூஸ் உங்களுக்கானது தான். பிளிப்கார்ட் (Flipkart) இப்போது ஆப்பிள் ஐபோன் 14 மீது அதிரடி தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. ரூ79,999 விலை கொண்ட ஆப்பிளின் ஐபோன் 14 பேசிக் வேரியண்ட் (Basic Variant) 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஸ்மார்ட்போனாது ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இப்போது ரூபாய் 72,499 விலைக்கு விற்பனையாகி வருகிறது.
தள்ளுபடி
அதாவது ப்ளிப்கார்ட் இணையதளமானது பிரத்தியேகமாக ரூ. 7,401 அதிரடி தள்ளுபடியை ஐபோன் 14 ஸ்மார்ட்போன் மீது அறிவித்துள்ளது. இத்துடன், உங்களிடம் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கார்டு (HDFC Bank Card) இருக்கும் பட்சத்தில் கூடுதலாக ரூபாய் 4,000 தள்ளுபடியும் கிடைக்கும். அந்த வகையில் மொத்தம் ரூ. 11,401 தள்ளுபடியுடன், சுமார் ரூ. 68,499 விலைக்கு புது ஐபோன் 14 ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க முடியும். மேம்பட்ட அம்சங்கள் கொண்ட ஐபோன் 14 128ஜிபி வேரியண்டை இத்தகைய தள்ளுபடி விலையில் வாங்குவது ஒரு சிறப்பான சலுகை என்றே கூறலாம்.
மற்றுமொரு தள்ளுபடி
உங்களிடம் ஹெச்டிஎஃப்சி பேங்க் கார்டு இல்லாத பட்சத்தில், பிளிப்கார்ட்டின் ஆக்சிஸ் பேங்க் கார்டை (Axis Bank Card) பயன்படுத்தி 5% கேஷ் பேக் (Cash Back) பெற முடியும். இதுவும் ஐபோன் 14ஐ தள்ளுபடி வாங்க ஒரு நல்ல சலுகை என்றே கூறலாம். ரூ.68,499 என்ற விலையில் இந்த ஐபோன் 14 மொபைலை வாங்குவது லாபமா? அப்படி என்ன இருக்கிறது இந்த ஐபோன் 14ல்?
ஐபோன் 14ல் கிடைக்கும் கூடுதல் வசதிகள்
ஐபோன் 13ஐ விட இந்த ஐபோன் 14ல் கூடுதல் OS அப்டேட்கள் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ஐபோன் 14 சீரிஸில் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்தியேகமாக வீடியோ ரெக்கார்டிங்கில் (Video Recording) ஆக்சன் மோடு சப்போர்ட் (Action Mode Support) கொடுக்கப்படுகிறது. மேலும் ஐபோன் 14ல் மற்ற ஐபோன்களில் இல்லாத கிராஷ் டிடக்ஷன் சப்போர்ட் (Crash Detection Support) மற்றும் சாட்டிலைட் கனெக்டிவிட்டி (Satellite Connectivity) ஆகிய அம்சங்களும் உள்ளது. இதுவே ஐபோன் 14ஐ மற்ற ஐபோன்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அதன் சிறப்பம்சங்களாகும்.
மற்ற வேரிண்டுகளின் தள்ளுபடி விலை
iPhone 14 மாடலின் 128ஜிபி வேரியண்டை தவிர்த்து 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பு அம்சங்கள் கொண்ட மேலும் இரண்டு வேரியண்டுகளும் ஐபோன் 14ல் உள்ளது. இந்த இரண்டு வேரியண்டுகளும் முறையே ரூ. 82,499 மற்றும் ரூ.1,02,499 விலையில் பிளிப்கார்ட்டில் விற்பனையாகிறது. ஐபோன் 14ன் அனைத்து வேரியண்டுகளுக்கும் மேற்கூறிய சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் (Exchange) மூலம் மாற்றினால், புது ஐபோன் 14 இன் விலையை இன்னும் கணிசமாகக் குறைக்க முடியும். iPhone 14 வாங்க இதுதான் சரியான நேரம்.