Home News ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸை இப்போது வாங்கலாமா? எது சரியான நேரம்?

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸை இப்போது வாங்கலாமா? எது சரியான நேரம்?


உங்களுக்கு இப்போது புதிதாக ஒரு ஐபோன் மாடலை வாங்கத் திட்டமிருந்தால், கொஞ்சம் இதைப் படித்து முடித்துவிட்டு உங்கள் முடிவைத் தீர்மானியுங்கள். ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும், அது இப்போதும் விலை உயர்ந்த ஆப்பிள் போனாகவே இருக்கிறது.

ஐபோன் 13 சீரிஸ் விலை குறையுமா?

ஆனால், வழக்கம் போல ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சாதனம் அறிமுகமாகும் நேரத்தில், அதற்கு முந்தைய மாடல்களின் விலையை நிறுவனம் குறைக்கும். இதை ஆப்பிள் ஒரு பழக்கமாகவே வைத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஆண்டிற்கான புதிய வரவான ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வந்தவுடன், ஐபோன் 13 சீரிஸின் அதிகாரப்பூர்வ விலையில் பெரிய விலைக் குறைப்பை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்த விஷயத்தை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சாதனத்துடன் நிச்சயமாக இந்த ஆண்டிலும் செய்யுமா என்பதில் எந்த உறுதியும் இல்லை என்றாலும், இது சாத்தியமாக வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்லலாம். ஆப்பிள் ஐபோன் 13 தொடர், குறிப்பாக இந்தியாவில் இன்றும் மிகவும் விலை உயர்ந்த டிவைஸாகவே திகழ்கிறது.

ஐபோன் 14 அறிமுகம் மிக அருகில் உள்ளது. ஒருவேளை, உங்களுக்கு இப்போது ஐபோன் 13 மாடலை வாங்க முடிந்தாலும், ஒரு மாதத்திற்கு முன்பே எதிர்பார்க்கப்படும் விலைக் குறைப்புக்குப் பிறகு அதைக் குறைந்த விலையில் வாங்குவது தானே அதிக அர்த்தமுள்ள சிறந்த முடிவாக இருக்கும். நாம் இப்போதே ஆகஸ்ட் மாதத்திற்குள் அடியெடுத்து வைக்கப் போகிறோம் என்பதனால், ஆப்பிள் iPhone 14 தொடரின் வெளியீட்டிற்கு இன்னும் அதிக தூரமில்லை.
இதுமட்டுமின்றி, நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இங்கு இருக்கிறது, அது என்னவென்றால், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் பண்டிகை காலம் என்பதனால் நிச்சயமாகப் பல சலுகைகளை நீங்கள் பெற வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில், ஐபோன்களின் விலையில் ஒரு பெரிய விலைக் குறைப்பைப் பெறவும் அதிக வாய்ப்புள்ளது என்பதை மறக்காதீர்கள்.
ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 இல் மும்முரம் ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 இல் மும்முரம் எனவே, ஐபோன் 14 சீரிஸ் வெளியான பிறகு, ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸுக்கு விலைக் குறைப்பு அறிவித்த பிறகு காத்திருந்து ஐபோன் 13 மாடல்களை வாங்குவதே சிறப்பானதாகும். தெரியாதவர்களுக்கு, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யத் தயாராகி வரும் இந்த நேரத்தில், நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகத்திற்கு ரெடியாகி வருகிறது. ஆம், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை உருவாக்கி நிறுவனம் சோதனை செய்து வருகிறது.