Home News iPhone 15 சீரிஸ் கசிவு: புதிய வண்ணங்களில், பெரிய பேட்டரியோடு வருகிறதா?

iPhone 15 சீரிஸ் கசிவு: புதிய வண்ணங்களில், பெரிய பேட்டரியோடு வருகிறதா?

Highlights
  • ஐபோன் 15 சீரிஸ் முந்தைய மாடல்களை விட 18 சதவீதம் பெரிய பேட்டரிகளுடன் வரும் என்று கூறப்படுகிறது.
  •  புதிய கசிவின் படி, ஐபோன் 15 சீரிஸின் 4 மாடல்களும் பெரிய பேட்டரிகளைக் கொண்டிருக்கும்
  • ஐபோன் 15 சீரிஸ் இதுவரை இல்லாத புதிய நிறங்களில் வர இருக்கிறது.

ஐபோன் 15 சீரிஸ் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும், ஆப்பிள் பெரும்பாலும் iPhone 15, iPhone 15 Plus , iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max என நான்கு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும். ஆப்பிள் அதன் வரவிருக்கும் சாதனங்களைப் பற்றி எப்போதும் மெளனமாகவே இருக்கிறது. ஆனால் கசிவுகள் வந்தபடியேதான் இருக்கின்றன. அப்படியான சமீபத்திய கசிவுகள் iPhone 15 சீரிஸின் பேட்டரி அப்கிரேடுகள் மற்றும் புதிய வண்ண விருப்பங்களைப் பற்றி பேசுகின்றன. 

ஐபோன் 15 சீரிஸ் பேட்டரி

ஐபோன் பேட்டரிகள் சிறந்தவை அல்ல. ஆனால் ஆப்பிளின் சமீபத்திய மாடல்களில் அவை கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருகிறது. ஒவ்வொரு புதிய தலைமுறை ஐபோனோடு அதன் பேட்டரி திறனும் அதிகரிக்கிறது. அது ஐபோன் 15 சீரிஸிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Foxconn ஆதாரத்தை மேற்கோள் காட்டி வெளியான ITHome  இன் அறிக்கையின்படி, iPhone 15 சீரிஸின் பேட்டரி திறன் 18 சதவீதம் வரை அதிகரிக்கும்.

ஐபோன் 15 மாடல் 3,877mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. இது முந்தைய மாடலை விட 18 சதவீதம் அதிகமாகும். iPhone 15 plus ஆனது 4,912mAh பேட்டரியுடன் (13.6 சதவீதம்) வரும் மற்றும் iPhone 15 Pro ஆனது 3,650mAh பேட்டரியை (14.1 சதவீதம்) பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலானது சீரிஸின் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இது 4,852mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இது முந்தைய மாடலை விட 10.9 சதவீதம் அதிகமாகும்.

புதிய வண்ணங்களில் ஐபோன் 15 சீரிஸ்

ஆப்பிள், ஆறு விதமான நிறங்களில் ஐபோன் சீரிஸை வழங்குகிறது. இந்த முறை, ஐபோன் 15 ப்ரோவை கிரிம்சன் சிவப்பு நிறத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வெய்போ ஆதாரத்தை மேற்கோள் காட்டி 9to5Mac இன் அறிக்கை தெரிவிக்கிறது. ஐபோன் 14 ப்ரோவிற்கு ஆழமான ஊதா நிறத்தை முன்னறிவித்த அதே ஆதாரம் இதுவாகும். புதிய கிரிம்சன் ஷேட் “மிகவும் ஆழமானது” என்று கூறப்படுகிறது. எனவே இத்தனை வருடங்களாக நாம் பார்த்து வரும் PRODUCT(RED) நிறத்திற்கு பதில் இந்த வண்ணம் வழங்கப்படலாம்.

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவை புதிய பச்சை வண்ண விருப்பத்தில் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த பச்சை நிறம்  iPhone 11 மற்றும் iPhone 12 இன் புதினா போன்ற பச்சை நிறத்தைப் போலவே இருக்கும். எனவே இது ஐபோன் 13 போன்ற டார்க் ஃபாரஸ்ட் பச்சை நிறமாக இருக்காது.

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் முக்கிய விவரக்குறிப்புகள்
  • சிப்செட் – ஆப்பிள் ஏ15 பயோனிக்
  • ரேம் – 6 ஜிபி
  • டிஸ்ப்ளே – 6.7 அங்குலம் (17.02 செமீ)
  • பின் கேமரா – 12MP + 12MP + 12MP
  • செல்ஃபி கேமரா – 12MP
  • பேட்டரி – 4400mAh