இதுவரை எந்த ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கிடாத அந்துது ஸ்கோரை எடுத்துள்ளது ஐக்கூ 11 மொபைல். ஒரு ஸ்மார்ட்போனின் தரத்தை பெரும்பாலும் விவரம் தெரிந்த மக்கள் AnTuTu ஸ்கோரிங்கை வைத்துத் தான் மதிப்பீடு செய்து அது தரமானதா இல்லையா என்பதை கண்டு கொள்கிறார்கள். அப்படி, சமீபத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் தான் iQOO 11. இந்த ஸ்மார்ட் போனின் சமீபத்திய டெஸ்டிங் ஸ்கோர் ஒட்டுமொத்த இணையத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. காரணம், இதுவரை இருந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே இப்படி ஒரு உயர் மதிப்பெண்ணை எந்தவொரு ஸ்மார்ட்போனும் எடுத்ததில்லை.
இந்திய அறிமுகம்
உண்மையிலேயே இந்த புதிய ஸ்மார்ட்போனின் ஸ்கோரிங் மதிப்பீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் ரேட்டிங் ஸ்கேலை தாண்டியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் ஜனவரி 10ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குவால்கம் ஸ்னாப் டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட்டுடன் அறிமுகமாகும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் சேர்த்து iQOO 11 Pro ஸ்மார்ட்போனையும் நிறுவனம் அறிமுகம் செய்தது.
அதிகபட்ச மதிப்பெண்
வெளியான தகவலின்படி iQOO 11 இதுவரை இல்லாத AnTuTu மதிப்பெண்ணை பெற்றுள்ளது. நம்ப முடியாத விதத்தில் 13,23,820 என்ற AnTuTu மதிப்பெண்களை இந்த iQOO 11 சாதனம் பெற்றுள்ளது. இந்த மதிப்பெண் போக, iQOO 11 அதன் சிபியு டெஸ்டிங் இல் 2,70,987 என்ற மதிப்பெண்ணையும், அதேபோல் நம்ப முடியாத வகையில் 6,07,822 என்ற ஜிபியு மதிப்பெண்களையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஸ்டோரேஜ் மற்றும் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மதிப்பீட்டின் போது இந்த சாதனம் முறையே 2,44,782 மற்றும் 2,00,229 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளது.
இந்த புதிய iQOO 11 ஸ்மார்ட்போன் UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் LPDDR5 RAM உடன் வருகிறது. இந்த iQOO 11 சாதனம் Asus ROG Phone 6, Asus ROG Phone 6 Pro, Xiaomi 12T Pro போன்ற ஸ்மர்ட்போனின் மதிப்பெண்களை தரைமட்டம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்படி மதிப்பெண்களை வாரிக் குவித்த இந்த iQOO 11 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?
iQOO 11 சிறப்பம்சம் மற்றும் முழு விபரங்கள்
- 6.78 அங்குல AMOLED LTPO 4.0 (3200 x 1440 பிக்சல்) டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC
- 16 GB ரேம் மற்றும் 512 GB ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 13 OS
- 50 MP + 13 MP + 8 MP டிரிபிள் ரியர் கேமரா
- 16 MP செல்ஃபி ஷூட்டர்
- 5,000mAh பேட்டரி
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5G
- டூயல் 4G VoLTE Wi-Fi 6 802.11
- ப்ளூடூத் 5.3
- ஜிபிஎஸ் / க்ளோனஸ் (GLONASS)
- யுஎஸ்பி டைப்-C
- NFC
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- IR சென்சார்
- ஹை-ஃபை ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
இது போன்று ஏராளமான அம்சங்களை இந்த iQOO 11 போன் கொண்டுள்ளது.






