ரூ.4000 அறிமுகச்சலுயோடு ரூ.26,999 விலையில் அறிமுகமாகும் iQOO neo 7 5G

Highlights

  • வரும் பிப்ரவரி 16-ம் தேதி அன்று ஐக்யூ நியோ 7 5ஜி (iQOO Neo 7 5G)என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆக இருக்கிறது.
  • இந்த போன் அறிமுகம் ஆகும் போதே ரூ.4000 தள்ளுபடியுடன் அறிமுகமாகிறது.

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, இதன் விலை மற்றும் சலுகைகள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Neo 7 5G போன் ரூ.30,999-விலையில் வெளியாகிறது. ஆனால் அறிமுக சலுகையாக 8ஜிபி ரேம் கொண்ட iQOO Neo 7 5G மாடலை ரூ.26,999-விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக சலுகை

அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் மாடல் ரூ.34,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12ஜிபி ரேம் கொண்ட iQOO Neo 7 5G மாடலை அறிமுக சலுகையாக ரூ.30,999-விலையில் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.7அங்குல ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். இது பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு  அருமையாக இருக்கும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G.

சிப்செட்

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் FunTouchOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.

 

மெமரி

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் இருக்கிறது.

கேமரா

புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

பேட்டரி

இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். கூடவே 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். இதனால் இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்

 

கனெக்டிவிட்டி

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.