64MP கேமரா, 4880mAh பேட்டரியோடு பட்ஜெட் விலையில் வெளியாகிறதா iQOO நியோ 7 எஸ்இ?

டிசம்பர் 2 ஆம் தேதி, விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான iQOO, தனது iQOO 11 series மொபைல்களுடன் புதிய iQOO நியோ 7 எஸ்இ எனும் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஐக்யூ நியோ 7 எஸ்இ

இந்த iQOO நியோ 7 எஸ்இ Dimensity சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமர உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவர இருக்கிறது. ஆன்லைனில் கசிந்த iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே

iQOO Neo 7 SE ஸ்மார்ட்போன் ஆனது 6.78 அங்குல AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் 2400 X 1080 பிக்சல்ஸ் அடர்த்தி, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்

iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8200 5G சிப்செட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகத்தைக் கொடுக்கும். அதேபோல் இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.

மெமரி

iQOO நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய போனில் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

கேமரா

புதிய iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரயர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகிறது.

பாஸ்ட் சார்ஜிங்

iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4880 எம்ஏஎச் பேட்டரி வசதி வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் கண்டிப்பாக நீண்ட நேர பேட்டரி பேக்கப்பைக் கொடுக்கும் என்று நம்பலாம். மேலும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. இதன்மூலம் இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

கனெக்டிவிட்டி

அதேபோல் இந்த போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரும். இது தவிர இந்த போன், 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை இந்த iQOO நியோ 7 எஸ்இ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும் Black, Electric Blue மற்றும் Galaxy என முன்று விதமான நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த iQOO நியோ 7 எஸ்இ போன்.