Home News iQoo Neo 8 சீரிஸ் 1.5K தெளிவுத்திறன், ஃப்ளெக்சிபிள் டிஸ்ப்ளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கோடு வெளிவரலாம்.

iQoo Neo 8 சீரிஸ் 1.5K தெளிவுத்திறன், ஃப்ளெக்சிபிள் டிஸ்ப்ளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கோடு வெளிவரலாம்.

Highlights
  • iQoo Neo 8 சீரிஸ் போன்களில் 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா இருக்கலாம்
  • வரவிருக்கும் இந்த ஃபிளாக்ஷிப் தொடரில் 16ஜிபி ரேம் வரை இடம்பெறலாம்
  • iQoo Neo 8 சீரிஸ் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க அதிக வாய்ப்புள்ளது

iQoo Neo 8 ஆனது, நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸாக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகமான iQoo Neo 7 சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் வரிசை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன உற்பத்தியாளரிடமிருந்து வரவிருக்கும் இந்த Neo 8 சீரிஸானது, iQoo Neo 8 மற்றும் iQoo Neo 8 Pro என இரண்டு மாடல்களைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் போன்களின் டிஸ்ப்ளே, கேமரா, செயல்திறன், அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு பற்றி சில யூகங்கள், சில எதிர்பார்ப்புகள் போன்றவை இணையத்தில் வெளியாகி உள்ளன.

 

டிஸ்ப்ளே

டிப்ஸ்டர், ‘டிஜிட்டல் சாட் ஸ்டேஷன்’ பதிவின்படி, சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவில் வெளியான இந்த மொபைல் சீரிஸின் கசிவுத் தகவல்கள், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவால் ட்விட்டரில் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரவிருக்கும் iQoo Neo 8 தொடரானது 1.5K தெளிவுத்திறனுடைய டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் அதிக  ‘PWM (Pulse-width modulation) டிம்மிங்’கைக் கொண்டு இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த சீரிஸில் iQoo Neo 8 மற்றும் iQoo Neo 8 Pro ஆகிய மாடல்கள் வெளியாகலாம். இதற்கிடையில், MySmartPrice-ன் ஒரு அறிக்கை, இந்த சீரிஸ் அதன் முன்னோடியான iQoo Neo 7 தொடரைப் போன்ற திரை அளவில் வெளிவரலாம் என்று தெரிவிக்கிறது. அதாவது, iQoo Neo 8 தொடர் 6.78 அங்குல AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்

டிப்ஸ்டரின் எதிபார்ப்பின்பைட் உயர்நிலை மாடலான  iQoo Neo 8 Pro ஆனது Snapdragon 8+ Gen 1 SoCஐக் கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் iQoo Neo 8 மாடலானது, இன்னும் அறிவிக்கப்படாத MediaTek Dimensity 9200+ SoC உடன் வெளியாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மீடியா டெக் அதன் தற்போதைய தலைமுறை முதன்மையான மீடியாடெக் டைமன்சிட்டி 9200 SoC ஐ மட்டுமே கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது .

 

எதிர்பார்க்கப்படும் வசதிகள்

Weibo வெளியிட்டு இருக்கும் போஸ்ட்டின்படி iQoo Neo 8 சீரிஸ் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இதன் முன்னோடியான iQoo Neo 7 சீரிஸ் போன்கள் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்குவது குறிப்பிடத்தகக்கது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன் சீரிஸ் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என்று டிப்ஸ்டர் எதிர்பார்க்கிறார். இந்த சீரிஸ் போன்களில்  16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான சேமிப்பு வசதியும் இருக்குமெனத் தெரிகிறது.

இந்தியாவுக்கு வருமா?

iQoo Neo 8 சீரிஸ் மே 2023 இல் சீனாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. iQoo Neo 7 சீரிஸ் கடந்த ஆண்டு இறுதியில் iQoo Neo 7, iQoo Neo 7 5G , iQoo Neo 7 SE மற்றும் iQoo நியோ 7 ரேசிங் ஆகிய மாடல்களோடு  சீனாவில் அறிமுகமானது. இந்த iQoo Neo 7 சீரிஸ் மொபைல்களில் ஒரு மாடல் மட்டுமே ரீபிராண்டட் பதிப்பாக இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. அது சீனாவில் கிடைக்கும் iQoo Neo 7 SE இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இம்முறையாவது iQoo நிறுவனம் இந்தியாவில் அதன் நியோ 8 சீரிஸின் அதிக மாடல்களை வெளியிடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

இதனிடையே, iQoo அதன் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸின் விவரங்கள், வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையோ அல்லது குறிப்பையோ வெளியிடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.