Home Leaks iQOO Neo 9 Pro இன் Conqueror Black பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

iQOO Neo 9 Pro இன் Conqueror Black பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

iQOO இந்தியாவில் பிப்ரவரி 22 அன்று iQOO Neo 9 Pro ஐ வெளியிட இருக்கிறது. மொபைலின் ஆரம்ப டீஸர்கள் ஏற்கனவே சிவப்பு-வெள்ளை இரட்டை தொனியில் வரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இப்போது, ​இந்த மொபைலின் கருப்பு வேரியண்டை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வண்ணம் பிராண்ட் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மேலே உள்ள போஸ்டர், வரவிருக்கும் iQOO Neo 9 Pro ஆனது Conqueror Black பதிப்பிலும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. கருப்பு வேரியண்ட் அதன் பிளாஸ்டிக் பின் பேனலில் ஒரு கடினமான மேட் பூச்சு கொண்டுள்ளது. அதே நேரத்தில் சிவப்பு-வெள்ளை பதிப்பு லெதர் ஃபிணிஷிங்கைக் கொண்டுள்ளது. Neo 9 Proவிற்கு கூடுதல் வண்ண விருப்பங்கள் வழங்கப்படுமா என்பது பற்றி சரியான விவரங்கள் இல்லை. மொபைலின் கருப்பு வேரியண்டின் படம் கீழே காட்டப்பட்டுள்ளது.

iQOO Neo 9 Pro : (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள், விலை

iQOO Neo 9 Pro Conguorer Black | ஆதாரம்

 

டிஸ்ப்ளே

அறிக்கைகளின்படி, iQOO Neo 9 Pro ஆனது 6.78 இன்ச் அளவுள்ள பிளாட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். திரை 1.5K தெளிவுத்திறனை கொண்டிருக்கும்.  144Hz புதுப்பிப்பு வீதம் வரை ஆதரிக்கும். இது கைரேகை சென்சாருடன் ஒருங்கிணைக்கப்படும்.

சிப்செட் & ரேம்

Snapdragon 8 Gen 2 சிப்செட்டை இந்த Neo 9 Pro மொபைல் கொண்டிருக்கும். இதே சிப் தான் OnePlus 12Rஐ இயக்குகிறது. இது ஜனவரி 23 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். Neo 9 Pro ஒரு மாதத்திற்குப் பிறகு அறிமுகமாகும் போது, ​​அது 12Rக்கு போட்டியாக இருக்கும். iQOO ஃபோன் 12 GB வரை LPDDR5x ரேம் மற்றும் 256 GB வரை UFS 4.0 சேமிப்பகத்துடன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

முன்பக்கத்தில், iQOO Neo 9 Pro மொபைல் 16 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டிருக்கும். மொபைலின் பின்புற கேமரா அமைப்பானது OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் Sony IMX920 முதன்மை கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இயங்குதளம் & பேட்டரி

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 OSல் FunTouch OS 14 அடுக்குடன் இயங்கும். இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,160mAh பேட்டரி, டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் IR பிளாஸ்டர் போன்ற மற்ற அம்சங்களையும் வழங்கும்.

விலை

iQOO Neo 7 Pro இந்தியாவில் ரூ.37,999 (~$456) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  Neo 9 Pro ரூ. 40,000 (~$480) என்ற தொடக்க விலையுடன் வரக்கூடும்.