Home News 120W சார்ஜிங், 5000mAh பேட்டரி, 50MP கேமரா, 16GB RAM உடன் வெளியானது ஐக்யூ நியோ 7 ரேசிங் ஸ்பெஷல் எடிஷன்!

120W சார்ஜிங், 5000mAh பேட்டரி, 50MP கேமரா, 16GB RAM உடன் வெளியானது ஐக்யூ நியோ 7 ரேசிங் ஸ்பெஷல் எடிஷன்!

ஐகூ நிறுவனம் தனது நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.

டிஸ்ப்ளே

புதிய ஐக்யூ நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போனில் 6.78 அங்குல FHD+ சாம்சங் E5 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1080 x 2400 pixels அடர்த்தி, 20:9 ratio கூடவே அதிகபட்சமாக 1500 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸைக் கொண்டு வெளி வந்து இருக்கிறது.

சிப்செட்

இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரோடு வெளியாகி இருக்கிறது. இது அட்ரினோ 730ஐ கொண்ட ஒரு 4nmஆக்டாகோர் ப்ராஸசர் ஆகும்.

இயங்குதளம்

இந்த ஐக்யூ நியோ 7 ரேசிங் எடிஷன் ஆண்ட்ராய்டு 13 மேல் ஆர்ஜின் ஓஎஸ் 3 ஸ்கின் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.  இது ஒரு 5ஜி மொபைல் ஆகும்.

கேமரா

இது 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா என பின்பக்கத்தில் மூன்று கேமராக்களையும் ஒரு LED ப்ளாஷையும் கொண்டு இருக்கிறது. முன்பக்கத்தி வீடியோ அழைப்புக்காகவும், செல்ஃபிக்காகவும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது 4K வீடியோ பதிவையும் ஆதரிக்கிறது.

மெமரி

இந்த மொபைல் 256GB – 8GB RAM, 256GB – 12GB RAM, 256GB – 16GB RAM, 512GB – 16GB RAM என நான்கு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. மெமரியை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதி இதில் வழங்கப்படவில்லை.

பேட்டரி & சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் 4013mm² VC கூலிங் மற்றும் மல்டிலேயர் கிராஃபைட் ஹீட் டிசிபேஷன் சிஸ்டம் சாதனம் அதிக சூடாவதை தவிர்க்க செய்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் இந்த போனை நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும்.

கனெக்டிவிட்டி

இவை தவிர இந்த போனில் Wi-Fi, GPS, NFC, Type C port, OTG, ப்ளூடூத் போன்ற வசதிகளும் இருக்கிறது. 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ போன்றவை இல்லை. பாதுகாப்புக்கென அண்டர் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை & விற்பனை

ஐக்யூ நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆரஞ்சு, புளூ மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை 2 ஆயிரத்து 799 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 33 ஆயிரத்து 310 என துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை 3 ஆயிரத்து 599 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 42 ஆயிரத்து 850 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இதன் விற்பனை ஜனவரி 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

அம்சங்கள்