விவோவின் துணை பிராண்ட் ஆன iQoo இப்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய iQOO Z6 Lite 5G என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படும் என்று iQoo அறிவித்துள்ளது. இது அமேசான் வழியாக அறிமுகம் செய்யப்படுவதனால், அமேசான் தளத்தில் ஒரு மைக்ரோ சைட் இந்த போனின் வெளியீட்டு தேதி உட்பட, இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள், வடிவமைப்பு போன்ற விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது.
புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்? அமேசான் பட்டியலின் படி, இந்த புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் உடன், போனின் பின்புறத்தில், டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்பதை அமேசான் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், iQOO Z6 Lite 5G குறைந்த விலையில் 120Hz ஆதரிக்கும் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்
இதன் சரியான சிப்செட் விபரம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. iQOO Z6 Lite 5G ஸ்மார்ட்போன் முழு HD+ கொண்ட 6.58 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இது Qualcomm Snapdragon 680 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலாக வெளிவரும்.
கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங்
இது 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP சென்சார் கொண்ட டூயல் கேமராக்களுடன் வரும். முன்பக்கத்தில், இது 8MP கேமராவை கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும். இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்கும்.
விலை
இந்த போன் ரூ.15,000க்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo T1x இன் மறுபெயரிடப்பட்ட போன் ஆகும். iQoo Z6 Lite ஆனது Vivo T1x ஐ விட ரூ.500 முதல் ரூ.700 வரை குறைவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Vivo T1x இந்தியாவில் அடிப்படை 4ஜிபி ரேம் + 64ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ.11,999 ஆகவும், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.14,999 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






