
iQOO Z6 Lite 5G
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது iQOO Z6 Lite 5G. இந்த மொபைல் Amazon India-வில் கிடைக்கிறது. iQOO Z6 Lite 5G மொபைல் Z6 வரிசையின் கீழ் வெளியகும் நிறுவனத்தின் நான்காவது மொபைல் இதுவாகும். இந்த Z6-சீரிஸின் கீழ் iQOO Z6, iQOO Z6 5G மற்றும் iQOO Z6, Pro 5G ஆகிய மொபைல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.
iQOO Z6 Lite 5G ஆனது Qualcomm Snapdragon 4 Gen 1 ப்ராஸசருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ்ரேட் உடன் கூடிய டிஸ்ப்ளே, 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரி உள்ளது. பாக்ஸில் சார்ஜர் இல்லாமல் வெளியாகும் முதல் iQOO ஸ்மார்ட்போன் இந்த iQOO Z6 Lite 5G ஆகும். இதன் விலை, சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
விலை & சலுகை
iQOO Z6 Lite 5G மொபைலின் 4GB + 64GB வேரியண்ட் ரூ.13,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. அதுவே, 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.15,499க்கு விற்கப்படுகிறது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, iQOO SBI உடன் கூட்டு சேர்ந்துள்ளது, இதன் கீழ் வாடிக்கையாளர்கள் iQOO Z6 Lite இல் ரூ.2,500 கேஷ்பேக் பெறுவார்கள். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இந்த சலுகை கிடைக்கும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு சலுகை செப்டம்பர் 14 முதல் 15 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, iQOO Z6 Lite வாடிக்கையாளர்கள் 399 ரூபாய்க்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அடாப்டரை காம்போ சலுகையாக வாங்கலாம்.
சிறப்பம்சம்
iQOO Z6 Lite 5G ஆனது நாட்டின் மிகவும் குறைந்த விலை 5ஜி போன்களில் ஒன்றாகும். ஃபோனின் முன்பக்கத்தில் 6.58 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்-ஐ கொண்டிருக்கிறது. இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்டு அறிமுகமான உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இது முந்தைய பிராசஸரை விட 10 சதவீதம் மேம்பட்ட GPU திறன் மற்றும் 15 சதவீதம் மேம்பட்ட CPU திறன் கொண்டிருக்கிறது.
கேமரா
iQOO Z6 Lite 5G மொபைல் பேனலில் பின்புறத்தில் 50MP இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 8MP முன் கேமரா உள்ளது. இவை அனைத்தும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் அம்சங்களில் கூடுதல் 2ஜிபி மெய்நிகர் நினைவகத்திற்கான ரேம் பூஸ்டர், அல்ட்ரா கேம் பயன்முறை மற்றும் நீண்ட ஹை செயல்திறனுக்கான நான்கு-கூறு கூலிங் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் கிரீன் மற்றும் மிஸ்டிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது.
