
iQOO, இந்த மாதத் தொடக்கத்தில், iQOO Z7i , iQOO Z7x 5G மற்றும் iQOO Z7 5G ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. அதேபோல் இந்தியாவில் iQOO Z7 5G ஐ அறிமுகப்படுத்தியது , ஆனால் இது iQOO Z7 சீன வேரியண்டுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்ட தயாரிப்பு ஆகும்.
முன்பு SIRIM சான்றிதழ் இணையதளத்தில் I2216 மாடல் எண்ணுடன் காணப்பட்ட iQOO Z7x 5G மொபைலை குளோபல்/இந்தியா வேரியண்டாக iQOO Z7x என்ற பெயரில் வெளியிட தயாராகி வருகிறது. சமீபத்தில், வரவிருக்கும் iQOO Z7x மொபைல் புளூடூத் சிறப்பு ஆர்வக் குழு தரவுத்தளத்தில் இருப்பதை ‘பிரைஸ்பாபா’வில் உள்ளவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ப்ளூடூத் தரவுத்தளத்தில் iQoo Z7x 5G
iQOO Z7x 5G ஆனது புளூடூத் SIG தரவுத்தளத்தில் மாதிரி எண் I2216 உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. iQOO Z7x புளூடூத் 5.1 இணைப்புக்கான ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதை பட்டியல் வெளிப்படுத்துகிறது. இந்த பட்டியல் வரவிருக்கும் Z7 சீரிஸ் மொபைலின் PD2272F_EX_A_13.0.5.0.W20. என்ற மென்பொருள் பதிப்பையும் காட்டுகிறது.
iQOO Z7x சீன வேரியன்டின் மாதிரி எண்ணின் மென்பொருள் பதிப்பில் வரும் 2272 என்ற எண், வரவிருக்கும் iQOO Z7x குளோபல் எடிஷனிலும் இருக்கிறது. iQOO Z7x சீன எடிஷன் மாதிரி எண் V2272A ஆகும். மென்பொருள் பதிப்பின் அடிப்படையில் iQOO Z7x குளோபல் எடிஷன்அதன் சீன எண்ணைப் போலவே இருக்கும் என்று தோன்றுகிறது.
iQOO Z7x இந்திய வெளியீடு
கடந்த வாரம், இந்தியாவில் ஏப்ரல் மாதம் iQOO Z7x அறிமுகம் செய்யப்படும் என்று இணையத்தில் ஒரு அறிக்கை வெளிவந்தது. iQOO Z7x ஆனது இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்றும், ரூ.14,000 முதல் ரூ.16,000 வரையிலான விலைப் பிரிவில் அவை இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
சிப்செட் & டிஸ்ப்ளே
iQOO Z7x ஆனது Qualcomm Snapdragon 695 சிப்செட் மற்றும் Adreno 619 GPU மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் LPDDR4X ரேம் மற்றும் UFS 3.1 சேமிப்பகத்தைப் பயன்படுத்துகிறது. இது 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட, முழு எச்டி+ ரெசல்யூஷன், 480நிட்ஸ் உச்ச பிரகாசம் கொண்ட 6.64 அங்குல எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இதன் மேல் மையப்பகுதியில் பஞ்ச் ஹோல் நாட்ச் இருக்கிறது. இது ஆண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பான ஆண்ட்ராய்டு 13 உடன் வெளியாகிறது.
கேமரா & பேட்டரி
iQOO Z7x ஆனது 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது பின்பக்கத்தில் 50எம்பி முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 2எம்பி டெப்த் சென்சாரும் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிக்களுக்காக 8MP முன்பக்க கேமரா இருக்கிறது. iQOO Z7x ஆனது, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது மற்றும் டைப்-சி போர்ட்டில் சார்ஜ் செய்கிறது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகிறது. இருப்பினும், இந்த மொபைலின் இந்திய பதிப்பு அதே வேகமான சார்ஜிங் வேகத்தை வழங்க வாய்ப்பில்லை.