ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் லோகேஷ்?

Highlights

  • சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
  • தனது கடைசி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் நன்றாக இருக்கும் என ரஜினி எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 படங்கள் அவரது லைன் – அப்பில் உள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

ரஜினியின் கடைசி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிக்கு கேமியோ ரோல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு தலைவர் 171 படத்தின் இயக்குநர் யார் என்பது தான்.

 

ரஜினியின் விருப்பம்

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ரஜினி. தலைவர் 171 என்ற டைட்டிலில் அப்டேட்டுக்காக காத்திருக்கும் இந்தப் படத்தை, தசெ ஞானவேல் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தலைவர் 171 கடைசிப் படமாக இருக்கும்பட்சத்தில் அதனை லோகேஷ் இயக்குவார் என சொல்லப்படுகிறது. ரஜினி கடைசியாக ஒரு இன்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார். அதனால் தான் லோகேஷிடம் அதுகுறித்து பேசியதாக தெரிகிறது.

 

விட்டுக் கொடுப்பாரா கமல்?

தற்போது விஜய்யின் லியோ படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்து கைதி, விக்ரம் படங்களின் இரண்டாம் பாகத்தை முடிவு செய்துள்ளார். முக்கியமாக கார்த்தியின் கைதி 2 ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என அவரே கூறியுள்ளார். அதன்பிறகு விக்ரம் 2 படத்தை இயக்க லோகேஷ் பிளான் போட்டுள்ளார். அதேநேரம் ரஜினியை இயக்க தன்னை தேடிவந்த வாய்ப்பை விட்டுவிடவும் லோகேஷுக்கு மனம் இல்லையாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்றால், அது கமல் எடுக்கும் முடிவில் தான் உள்ளதாம்.

 

லோகேஷ் கனகராஜ் நம்பிக்கை

ரஜினியின் படத்தை முடித்துவிட்டு விக்ரம் 2வை தொடங்கலாமா என லோகேஷ் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் விக்ரம் இரண்டாம் பாகத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கமலிடம் பேசி வருகிறாராம் லோகேஷ். தற்போது இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், சீக்கிரமே ரஜினி – லோகேஷ் படத்தின் அறிவிப்பு வரலாம் என சொல்லப்படுகிறது. ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்தால், அதுவும் எல்சியூ கான்செப்ட்டில் இருக்குமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனாலும், இதுகுறித்து ரஜினி, லோகேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.