
குறைந்த விலையில் நல்ல ஸ்மார்ட்போன்களை வழங்கும் நிறுவனமான Itel, இந்திய பயனர்களுக்காக மற்றொரு புதிய மலிவான itel A60S என்ற மொபைலிக் கொண்டு வருகிறது. இ-காமர்ஸ் தளமான அமேசானில் இப்போனின் அறிமுகத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மொபைல் 8ஜிபி ரேம் வரை ஆற்றலைப் பெறும் என்பது சிறப்பு. அதுவும் 7 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இந்த மொபைல் வெளியாக இருக்கிறது. அதன் விவரக்குறிப்புகள் மற்றும் வெளியீட்டுத் தகவலை அறிந்து கொள்வோம்.
itel A60S எப்போது வெளியாகும்?
இ-காமர்ஸ் தளமான அமேசானில் Itel A60S டீசர் வெளியாகியுள்ளது. இதில் போனின் சிறப்பு விவரக்குறிப்புகளும், பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் போனுடன் இருக்கும் படமும் காணப்படுகிறது. டீசரில் இருந்து வெளியீட்டு தேதி தெரியவில்லை. ஆனால் மொபைல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசரில், இந்த போன் ரூ.7000க்கும் குறைவான விலையில் வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
itel A60s விவரக்குறிப்புகள்
- வடிவமைப்பு: itel A60S வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பின் பேனலில் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பெரிய சதுர கேமரா தொகுதி உள்ளது. இதில் இரண்டு கேமராக்கள் மற்றும் LED ஃபிளாஷ் யூனிட் உள்ளது. இதில் கைரேகை சென்சார் உள்ளது.
- சேமிப்பு: iTel A60S ஆனது 4GB ரேம் மற்றும் 4GB விர்ச்சுவல் ரேம் உடன் வரும் என்று அமேசான் பட்டியல் கூறுகிறது. அதாவது பயனர்கள் 8 ஜிபி ரேம் ஆதரவைப் பெறுவார்கள். மொபைலில் 64 ஜிபி உள் சேமிப்பு இருக்கும்.
- டிஸ்ப்ளே: கடந்த வாரம் itel A60S நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 6.6 இன்ச் HD+ ஐபிஎஸ் LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 720 x 1600 பிக்சல்கள் அடர்த்தியோடு வருகிறது.
- சிப்செட்: itel A60S ஆனது Unisock SC9863A1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 1.6GHz கடிகார வேகத்தில் இயங்குகிறது.
- கேமரா: கேமரா அம்சங்களைப் பார்க்கும்போது, இந்த மொபைல் 8 மெகாபிக்சல் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 5 மெகாபிக்சல் முன் கேமரா லென்ஸைப் பெறுகிறது.
- பேட்டரி: பேட்டரியைப் பொறுத்தவரை, மொபைல் 5000mAh பேட்டரியுடன் வருகிறது.
- மற்ற அம்சங்கள்: மற்ற அம்சங்களைப் பார்க்கும்போது, இந்த மொபைல் microSD கார்டு ஸ்லாட், வைஃபை, புளூடூத், டூயல் சிம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
Itel A60S அமேசான் பட்டியல் மற்றும் மேலே உள்ள அம்சங்களுடன் இந்தியாவிற்கும் வரக்கூடும். இந்த போன் அதிகாரப்பூர்வமாக இருக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.