128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் ரூ.10,000க்கும் குறைவான விலையில் வரும் iTel மொபைல்கள்

இதுவரை மொபைல் மார்கெட்டில் Samsung, Xioami, Vivo போன்ற பெருநிறுவனங்கள் தான் போட்டி போட்டுக் கொண்டு  புதிய மொபைல்களையும், புதிய தொழிற்நுட்பங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தன. ஆனால், சமீப காலமாக சிறு நிறுவனங்களும் இந்த போட்டியில் குதித்துள்ளன். குறிப்பாக, Tecno, itel போன்ற நிறுவனங்கள், பெரிய பிராண்டுகள் அறிமுகப்படுத்தும் தொழிற்நுட்பங்களை உடனடியாக தனது புது மொபைல்களில் வழங்குவது, ஃபோல்டபிள் போன் போன்ற பெரிய தொழிற்நுட்பங்களில் கூட மொபைல்களை வெளியிடுவது என சிறு நிறுவனங்களும் மல்லுக்கு நிற்கின்றன. அப்படி சமீபத்தில் குறைந்த விலையில், அதிக அம்சங்களுடன் மொபைல்களை வெளியிடும் நிறுவனமாக வளர்ந்து வருவது தான்.. itel.

இந்த itel நிறுவனத்தில் ரூ.10,000க்கும் குறைவான விலையில், பல மொபைல் உள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகி இருக்கும் மொபைல்களின் பட்டியலைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். இந்த மொபைல்களில் 128GB ஸ்டோரேஜ் உடன் சில மொபைலில் 50MP கேமரா உள்ளது. சில மொபைல்களில் 6000 அல்லது 7000mAH பேட்டரி உள்ளது. சில போனில் 8GB ரேம் கூட உள்ளது. இந்த விலைப்பிரிவில் இப்படிப்பட்ட வசதிகள் வருவது சிறப்பானதாகும். அப்படி ரூ.10,000க்குள்ளான விலையில் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் எந்த போனில் எந்தெந்த வசதிகள் வருகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

Itel S23

Unisoc T606 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel S23 மொபைலில் 8 GB RAM இருப்பது தனிச்சிறப்பு. இதுமட்டுமின்றி இதில் 50MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும், 5000mAh பேட்டரியும் உள்ளது. இது ஒரு 4G மொபைல் ஆகும்.

விலை: ரூ.7,514

 

Itel 55 5G

MediaTek Dimensity 6080 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel 55 5G மொபைலில் 6GB RAM உள்ளது. இதுமட்டுமின்றி இதில் 50MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும், 5000mAh பேட்டரியும் உள்ளது. இது ஒரு 5G மொபைல் ஆகும்.

விலை: ரூ.9,999

 

Itel P40 Plus

Unisoc T606 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel P40 Plus மொபைலின் தனிச்சிறப்பாக இதன் 7000mAh பேட்டரியைக் குறிப்பிடலாம். இதில் 4GB RAM உள்ளது. இதுமட்டுமின்றி இதில் 13MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இது ஒரு 4G மொபைல் ஆகும்.

விலை: ரூ.7,499 முதல்

 

Itel P40 

Unisoc SC9863A என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel P40 மொபைலின் தனிச்சிறப்பாக இதன் 6000mAh பேட்டரியைக் குறிப்பிடலாம். இதில் 4GB RAM உள்ளது. இதுமட்டுமின்றி இதில் 13MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இது ஒரு 4G மொபைல் ஆகும்.

விலை: ரூ.6,840

 

Itel A60S

Unisoc SC9863A1 என்ற ஆக்டாகோர் சிப்செட்டுடன் வெளியாகி இருக்கும் இந்த Itel P60S மொபைலில் 5000mAh பேட்டரி உள்ளது. இதில் 4GB RAM உள்ளது. இதுமட்டுமின்றி இதில் 8MP முதன்மை கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இது ஒரு 4G மொபைல் ஆகும். மற்ற மொபைலளோடு ஒப்பிடும் போது இதில் வசதிகள் சற்று குறைவே.

விலை: ரூ.6,840