ரூ. 296 ப்ரீபெய்டு திட்டம்! ஜியோ, ஏர்டெல் எதனுடையது சிறந்தது?

Highlights

  • ஜியோ, ஏர்டெல் என இரண்டு நிறுவனங்களும் ரூ.296 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன.
  • இதில் எந்த நிறுவனத்தின் திட்டம் அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர ஜியோவின் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.

 

ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்குத் தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music போன்ற வசதிகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

 

ஒப்பீடு

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரே மாதிரியான டேட்டா நன்மையை வழங்குகின்றன. கூடவே, வேலிடிட்டி கூட இரண்டு நிறுவனங்களும் 30 நாட்கள் வழங்குகின்றன. ஆனால் ஏர்டெல் நிறுவனம் FASTag இல் கேஷ்பேக் உள்ளிட்ட சிறப்பான கூடுதல் நன்மையை வழங்குகிறது. ஆனால் ஜியோ நிறுவனம் இதேபோன்ற கூடுதல் நன்மையை வழங்கவில்லை. எனவே ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது மிகவும் நல்லது. ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

 

ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. தினசரி வரம்பு ஏதும் இல்லாமல் மொத்தமாக 50 ஜிபி டேட்டா வரவு வைக்கப்படுகிறது. கூடுதலாகப் பயனர்களுக்கு ஏர்டெல் விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன், அப்பல்லோ 24/7 மற்றும் ஃபாஸ்ட்டேக் நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும்.

 

ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மூலம் பயனர்கள் சில கூடுதல் நன்மைகளைப் பெறலாம். இந்த திட்டமானது முழுமையாக 1 மாதத்திற்குச் செல்லுபடியாகும். உள்ளூர் மற்றும் எஸ்டிடி உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இதில் 300 எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 60 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. ஜியோ, ஏர்டெல் இரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து தங்களது 5ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கி வருகின்றன. இதனால் கூடிய விரைவில் 5ஜி சேவைக்கு என்று தனியாக சில திட்டங்களை இரு நிறுவனங்களும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.