Home List ஜியோ மற்றும் விஐ-ன் பண்டிகை கால சிறப்புத் திட்டங்கள்

ஜியோ மற்றும் விஐ-ன் பண்டிகை கால சிறப்புத் திட்டங்கள்

பண்டிகை காலம் இன்னும் முடியவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, ஜியோ மற்றும் விஐ (Jio and Vi) வழங்கும் பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரீசார்ஜ் நன்மைகள் அனைத்தும் இந்த மாத இறுதி வரை பயன்படுத்தக் கிடைக்கின்றன. இவை சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள் என்பதனால், இதனுடன் கிடைக்கும் சலுகைகளை நீங்கள் இப்போது மட்டுமே கிடைக்கும்.

ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் என்ன நன்மைகளை எந்தெந்த திட்டங்களுடன் வழங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வோடபோன் ஐடியா

முதலில் Vi வழங்கும் தீபாவளி ஆஃபர் விவரங்கள் பற்றி பார்த்துவிடலாம். Vi (Vodafone-Idea) மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட Vi திட்டங்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் Vi Diwali ஆஃபர் மூலம் ரீசார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் டேட்டா இலவசமாக கிடைக்கிறது.

Vi ரூ. 1,449 திட்டம்

இந்த ரூ.1,449 Vi தீபாவளி சலுகை திட்டம், உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மைகளை வழங்குகிறது. Vi ரூ.1,449 ரீசார்ஜ் திட்டம் 180 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக 50ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த Vi Diwali ஆஃபர் திட்டம் வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் தினமும் நள்ளிரவு முதல் காலை ஆறு மணி வரை இலவசடேட்டாவை 180 நாளுக்கு வழங்குகிறது.

Vi ரூ. 2,899 திட்டம்

நாம் முன்பு பார்த்த ரூ.1,449 திட்டத்தைப் போலவே, இந்த ரூ.2,899 ரீசார்ஜ் திட்டமும் அதே பலன்களை அப்படியே வழங்குகிறது. ஆனால், இது 50ஜிபி கூடுதல் டேட்டாவுக்குப் பதிலாக 75ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மற்றொரு புறம் இந்த ரீசார்ஜ் திட்டம் 365 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஒரு வருடம் முழுதும் இந்த திட்டம் வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் ஆள் நைட் பிங்கே இலவச டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vi ரூ. 3,099 திட்டம்

இந்த திட்டமும் 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. தீபாவளி சிறப்பு சலுகையாக இதில் கூடுதலாக 75ஜிபி டேட்டாவுடன் கிடைக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டம் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர மற்ற அனைத்து நன்மைகளும் மேல் பார்த்த திட்டங்களுக்கு இருப்பதைப் போன்றது.

ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி ஆஃபர்!

இப்போது ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் தீபாவளி ஆஃபர் விவரங்களைப் பற்றிப் பார்க்கலாம். அனைத்து ஜியோ 4ஜி ப்ரீபெய்ட் பயனர்களுக்கும், ரிலையன்ஸ் ஜியோ ஒரு தனித்துவமான தீபாவளி கொண்டாட்ட சலுகையை வெளியிட்டுள்ளது. இது டேட்டா அணுகல் உடன் வாய்ஸ் கால் நன்மை மற்றும் SMS ஆகியவற்றுடன் கூடுதலாகப் பல நன்மைகளை வழங்குகிறது. ஜியோ தீபாவளி சலுகையை வழங்கும் ரீசார்ஜ் திட்டம் ரூ. 2,999 விலையில் கிடைக்கிறது.

ரூ 2,999 திட்டம்

இந்த ஜியோ தீபாவளி கொண்டாட்ட சலுகை 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்தத் திட்டம் அதன் பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 SMS மற்றும் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 1 ஆண்டுக்கு இது 912 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

கூடுதல் சலுகைகள்

இந்த தனித்துவமான தீபாவளி ரீசார்ஜ் விருப்பத்துடன், ஜியோ கூடுதலாக 75 ஜிபி டேட்டாவையும் உள்ளடக்கியது. கூடுதலாக, பயனர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ சேவைகளுக்கான சந்தாவைப் பெறுகின்றனர். கூடுதலாக, Ferns & Petals 150 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. Zoomin நன்மை மற்றும் Ixigo விமான முன்பதிவுகளில் 750 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.

Ajio வழங்கும் 1000 ரூபாய் தள்ளுபடி. அர்பன் லேடர் 1500 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. Reliance Digital தளத்திற்கான ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சிறப்பு ரீசார்ஜ் தீபாவளி சலுகை இந்த மாதம் இறுதி வரை மட்டுமே கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அக்டோபர் 31ம் தேதிக்கு முன்னதாக இந்த ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு அடுத்த ஆண்டு வரை எந்த கவலையும் இருக்காது.