JioAirFiber, JioFiber பயனர்களுக்கு Fancode சந்தா இலவசம் – Jio அதிரடி!

கேமிங்கை விரும்பும் பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சிறந்த சலுகையை வழங்கியுள்ளது. Jio நிறுவனம் JioAirFiber, JioFiber மற்றும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக FanCode சந்தாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. FanCode என்பது ஒரு பிரீமியம் விளையாட்டு OTT App ஆகும். இந்த சலுகையின் கூடுதல் விவரங்களைப் பார்ப்போம்.

இலவச Fancode சந்தாவைப் பெறுவது எப்படி?

  • JioAirFiber, JioFiber பயனர்கள் இலவச ஃபேன்கோடு பெற ரூ.1199 மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
  • அதே நேரத்தில், ஜியோ மொபிலிட்டி ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ரூ.398, ரூ.1198, ரூ.4498 மற்றும் ரூ.3333 ஆகிய வருடாந்திர திட்டங்களில் ஃபேன்கோட் OTT செயலி சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

  • பயனர் FanCode பிரத்தியேக விளையாட்டு உள்ளடக்கத்தை JioTV Plus மற்றும் Jio செயலியில் பார்க்கலாம்.

குறிப்பு: இந்த சிறப்பு சந்தாவிற்கு நீங்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இது ஏற்கனவே உள்ள மற்றும் புதிய பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

FanCode OTT ஆப் என்றால் என்ன?

FanCode என்பது ஒரு விளையாட்டு ஸ்ட்ரீமிங் தளமாகும். இது நேரடி ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுகளின் சிறப்பம்சங்களைக் காட்டுகிறது. அதேநேரம், கிரிக்கெட் போட்டி, பெண்கள் கிரிக்கெட் போட்டி, கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால், மல்யுத்தம், பூப்பந்து போன்ற விளையாட்டுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், Fancode ஃபார்முலா 1 இந்தியா 2024 மற்றும் 2025 இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு ஆகும். இது பயனர்களை நேரடி பந்தயத்தைப் பார்க்க அனுமதிக்கிறது. இது ஆழமான கவரேஜ், நிகழ் நேர சிறப்பம்சங்கள், போட்டி வீடியோ, தரவு மற்றும் புள்ளிவிவரங்களின் விவரங்களையும் காட்டுகிறது.

ரூ.3333 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்

இந்த சலுகையுடன் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.3333 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 SMS/Day. இந்த திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள், அதாவது 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கூடுதல் நன்மைகள் ஃபேன்கோட் (ஜியோடிவி மொபைல் ஆப் மூலம் வழங்கப்படுகிறது), Jiocinema, JioTV மற்றும் JioCloud.

Fancode சந்தா ஒரு வருடம் முழுவதும் வரும். இது பயனர்களுக்கான JioCinema பிரீமியம் தொகுப்பு அல்ல. வழக்கமான JioCinema சந்தா மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.