
இந்தியாவில் ஜியோ 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய கையோடு ஜியோபோன் 5ஜி எனும் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது. ஜியோ நிறுவனம் புதிய 5ஜி போனை உருவாக்க கூகுள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. எனவே இந்த புதிய Jio Phone 5G மாடலில் நாம் பல புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம். மேலும் தற்போது Geekbench தளத்தில் இந்த ஜியோபோன் 5ஜி மாடலின் அம்சங்கள் கசிந்துள்ளது. அதை முதலில் பார்ப்போம்.
சிப்செட்
Geekbench தளத்தில் வெளியான தகவலின்படி, இந்த ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே Adreno 619 GPU ஆதரவையும் கொண்டுள்ளது.
செயல்திறன்
குறிப்பாக கேமிங் வசதிக்கு இந்த ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் மிகவும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இது சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 4ஜிபி ரேம் வசதியுடன் இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இருந்து போதிலும் வேறு ரேம் விருப்பங்களில் கூட இந்த போன் வெளிவரலாம்.
ஸ்டோரேஜ்
இந்த ஜியோபோன் 5ஜி மாடல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தி சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கும்.
டிஸ்பிளே
ஜியோபோன் 5ஜி போன் 6.5 அங்குல HD plus LCD டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ்ட் சார்ஜிங்
ஜியோபோன் 5ஜி போனில் 5000mAh பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதோடு வைஃபை 802.11 a/b/g/n, புளூடூத் 5.1 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இருக்கும்.
கேமரா
ஜியோபோன் 5ஜி ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டு இருக்கும். இதோடு செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் போன்ற வசதிகள் இந்த ஜியோபோன் 5ஜி மொபைலில் வழங்கப்பட்டு இருக்கும்.
எப்போது அறிமுகம்?
இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த புதிய ஜியோபோன் 5ஜி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் மாடல் நம்பர் LS1654QB5 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,000-விலையில் அறிமுகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.