Home News நாளை அறிமுகமாகிறது ஜியோ 5G!

நாளை அறிமுகமாகிறது ஜியோ 5G!

ரிலையன்ஸ் ஜியோ தனது 5G சேவையை நாளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது தனது இந்த சேவையை ‘Jio True 5G’ என்ற பெயரில் அழைக்கிறது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் இந்த 5ஜி சேவை துவங்குகிறது. அதுவும் நாளை (5-10-2022) முதலே. தனது ட்ரூ 5ஜி சேவையின் பீட்டா சோதனையை தனது பயனர்கள் விரும்பினால் அனுபவிக்கலாம் என்றும் கூறி இருக்கிறது. இந்த பீட்டா சோதனையில் பயனர்கள் ஜியோ ட்ரூ 5ஜி-யின் வேகத்தை 1 ஜிபி வரை பெற முடியும்.

அப்படி பீட்டா சோதனை செய்ய வரும் வாடிக்கையாளர்களுக்கு ’Jio 5G Welcome offer’ அதுவாகவே அப்கிரேட் ஆகிவிடும். இதற்கு அவர்களது மொபைலில் 5ஜி ஆதரவு இருந்தாலே போதும். ஜியோவும் ஏற்கனவே தனக்கான ஒரு 5ஜி மொபைலை தயாரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது.

ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஆகாஷ் அம்பானி, “நாடு முழுமைக்குமான இதுவரை இல்லாத அதிவிரைவான 5ஜி சேவையை தர ஜியோ தயாராக இருக்கிறது. இந்த 5ஜி சேவையானது குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டுமானதாக இருக்காது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு வேலைக்கும் இந்த சேவை கிடைக்கும்” என்று கூறினார்.

ஜியோ 5ஜி சேவை முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரும் வரை, இந்த பீட்டா சோதனை சேவை மற்ற எல்லா நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அதுமட்டும் இன்றி முழுவதுமாக சேவை துவங்கும் வரை ஜியோவின் பயனர்களுக்கு இந்த பீட்டா சோதனை பயன்பாட்டை வழங்குவது தொடரும் என்றும் கூறினார்.

ஜியோ தனது 5ஜி சேவையில் மூன்று விதமான நன்மைகளை தங்கள் பயனர்களுக்கு வழங்குகிறது.

1. முதலாவதாக, ஜியோ நெட்வொர்க்கானது முழுவதும் தனக்கான தகவமைப்பைக் கொண்டிருக்கிறது. அதாவது நெட்வொக்கிற்காக வேறு எந்த ஒரு நிறுவனத்தையும் சார்ந்து இருப்பதோ, பங்கிட்டுக் கொள்வதோ இல்லை. இதனால் எவ்வித குறைபாடோ,, தாமதமோ, தடையோ இன்றி 5ஜி வாய்ஸ் சேவைகளையும், இணைப்புகளையும் ஜியோ 5ஜியால் வழங்க முடியும்.

2. 5ஜி அலைகற்றையை பெறுவதில் இந்த வடருத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஜியோ முனைப்புடன் இருந்தது. குறிப்பாக இந்த 5ஜி அலைக்கற்றையின் 700MHz என்ற குறைந்த பேண்ட்வித் கொண்ட அலைகற்றைகளை பெற்ற ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே. இதன் மூலம் வீட்டிற்குள்ளும் கூட மிகச்சிறந்த சிக்னலை வழங்க முடியும்.

3. இந்த 5ஜி சேவையை பெற தற்போது உபயோகிக்கும் 4ஜி சிம் போதுமானது என்று ஜியோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏர்டெல்லும் இதே போல் கூறியது நினைவிருக்கலாம்.