ஒன்ப்ளஸ் போனுக்கு ரூ4,000 விலைக்குறைப்பு!


ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 10T 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்திய வேகத்தில் அதன் “150W பாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன்” ஒன்றின் விலையை குறைத்துள்ளது. அது OnePlus 10R 5G ஆகும்.

இந்த 10R மாடல் ஆனது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ரூ.4,000 என்கிற அதிரடி விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது, மேலும் அவை அனைத்திற்குமே ரூ.4,000 என்கிற விலைக்குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய விலை VS பழைய விலை

முன்னரே குறிப்பிட்டபடி, OnePlus 10R மாடலை மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகப்படுத்தியது. அவைகள் 8GB + 128GB (80W), 12GB + 256GB (80W) மற்றும் 12GB + 256GB (150W) ஆகும். அறிமுகத்தின் போது அவைகள் முறையே ரூ.38,999, ரூ.42,999 மற்றும் ரூ.43,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றன. தற்போது ரூ.4,000 என்கிற விலைக் குறைப்புக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் 8ஜிபி + 128ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட்களை முறையே ரூ.34,999 மற்றும் ரூ.38,999 க்கு வாங்கலாம். இதுதவிர, 150W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட்-ஐ ரூ.39,999 க்கு வாங்கலாம்.

வங்கி, இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர்கள்!

சியரா பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் என்கிற 2 நிறத் தேர்வுகளில் கிடைக்கும் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி மீது வங்கி சலுகை, இஎம்ஐ விருப்பம் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரும் கிடைக்கிறது. நீங்கள் ஐசிஐசிஐ பேங்க் கார்ட்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1,000 என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும் மற்றும் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI சலுகையும் கிடைக்கும். இதுதவிர்த்து OnePlus 10R -ஐ வாங்குபவர்கள் ரூ.3,000 ரூவரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.

சிறப்பம்சங்கள்

ரூ.34,999 க்கு OnePlus 10R வொர்த்-ஆ? இல்லையா? என்பதை பற்றி புரிந்துகொள்ள நாம் OnePlus 10R ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். பிறகு தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.7 அங்குல FHD+ Fluid AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த போன் MediaTek Dimensity 8100-MAX Octa-core சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கூடவே 12GB வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 3.1 ஹை-ஸ்பீட் ஃபிளாஷ் ஸ்டோரேஜ் இதில் உள்ளது.

எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் இருக்கும் செல்ஃபி கேமரா!

OnePlus 10R ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் முதன்மை கேமராவாக 50MP சோனி IMX766 சென்சார் + 119° ஃபீல்ட் ஆஃப் வியூ உடனான 8MP அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உடனான 16MP செல்ஃபி கேமரா உள்ளது.

இரண்டு 80W.. ஒரு 150W!

OnePlus 10R ஆனது இரண்டு வகையான ஃபாஸ்ட் சார்ஜிங் வேகத்தை வழங்குகிறது. ஹை -எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 150W SUPERVOOC எண்டூரன்ஸ் எடிஷன் ஆகவும், மற்ற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் ஆனது 80W SUPERVOOC உடனும் வருகிறது. 80W SUPERVOOC உடன் வரும் OnePlus 10R வேரியண்ட்கள் ஆனது 5,000mAh பேட்டரியுடன் வருகின்றன. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரி வெறும் 32 நிமிடங்களில் 1 – 100% சார்ஜ் ஆகும். 150W SUPERVOOC Endurance Edition-ஐ கொண்ட OnePlus 10R ஆனது 3 நிமிடங்களில் 1 – 30% வரை சார்ஜ் செய்யக்கூடிய 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

நிறைகளும், குறைகளும்!

OnePlus 10R ஸ்மார்ட்போன் அட்டகாசமான டிசைனை பெற்றுள்ளது. குறிப்பாக பேக் பேனலை பார்க்கும் போது, இது முற்றிலும் புதிய ஒன்பிளஸ் மாடலாக தெரிகிறது. – குறையே சொல்ல முடியாத திறமையான பெர்ஃபார்ம்மென்ஸ் – இது மிகவும் திறமையான பாஸ்ட் சார்ஜிங்கை கொண்டிருந்தாலும் கூட இதன் கேமராக்களை மிகச் சிறந்தவை என்று கூற முடியாது. அதே போல இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் செயல்திறன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்!