
இந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை என்ன? விலை குறைப்புக்கு பின்னரும் கூட இதை நம்பி வாங்கலாமா? அதில் இருக்கும் வசதிகள் என்னென்ன?பார்க்கலாம்!
ஒன்பிளஸின் 2022 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகமான OnePlus 10 Pro மாடல் தான் ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. ஆம்! இந்த ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த இரண்டுமே ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
OnePlus 10 Pro பழைய விலை vs புதிய விலை
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது – அது 8GB+128GB மற்றும் 12GB+256GB ஆகும். முன்னதாக 8ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.66,999 க்கும் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.71,999 க்கும் விற்பனையாகி வந்தது. இனி விலைக் குறைப்புக்கு பிறகு – முறையே ரூ.61,999 மற்றும் ரூ.66,999 க்கும் விற்பனை செய்யப்படும். இது வல்கானிக் பிளாக் மற்றும் எமரால்டு ஃபாரஸ்ட் என்கிற 2 நிறத் தேர்வுகளில் கிடைக்கும்.
சலுகைகள்
இருக்கிறது! OnePlus 10 Pro-வை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் சில கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது. நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வாங்குவதாக இருந்தால், 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.6,000 என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் நோ-காஸ்ட் இஎம்ஐ மூலமாகவும் வாங்கலாம். இவை தவிர ஒன்பிளஸ் அப்கிரேட் புரோகிராமின் (upgraded program) கீழ் ரூ.5,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடல் ஆனது முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 9 ப்ரோவை விட மிகவும் தேவையான மேம்படுத்தல்களை கொண்டுள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம். எப்படி பார்த்தாலும் இது ஒரு நல்ல, தரமான ஸ்மார்ட்போன் தான். OnePlus 9 Pro உடன் ஒப்பிடும்போது, OnePlus 10 Pro 5G ஆனது வேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட பெரிய பேட்டரி, சற்றே அதிக திறன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, அதிக 5G பேண்டுகளுடன் கூடிய சக்திவாய்ந்த சிப்செட், சிறந்த செல்ஃபி கேமரா மற்றும் அழகான வடிவமைப்பை பெற்று இருக்கிறது.
எல்லாவற்றை விட முக்கியமாக சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் ஐபோன் 13 மாடலின் பேஸிக் வேரியண்ட்-ஐ விட ஒன்பிளஸ் 10 ப்ரோவின் டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை குறைவாக உள்ளது (இப்போது இன்னும் குறைவு).
முக்கிய அம்சங்கள்
- 6.7 அங்குல Quad HD+ Fluid AMOLED டிஸ்ப்ளே (120Hz)
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 12
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48MP மெயின் + 50MP அல்ட்ரா-வைட் + 8MP டெலிஃபோட்டோ
- 32MP செல்ஃபி கேமரா
- 80W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50 வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
- 5000mAh பேட்டரி.
