சாம்சங்கின் 5G போனுக்கு ரூ3000 விலைகுறைப்பு!

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் மற்றொரு மிட்-ரேன்ஜ் 5G ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை என்ன? அது என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கிறது? விலை குறைப்புக்கு பிறகும் அதை நம்பி வாங்கலாமா? பார்க்கலாம்.

விலைக்குறைப்பை பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில், லேட்டஸ்ட் ஆக சேர்ந்துள்ள மாடல் – Samsung Galaxy A53 5G ஆகும். இந்த 5ஜி ஸ்மார்ட்போன் இந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் 5ஜி சேவை ஆனது எப்போது வேண்டுமானால் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற சூழ்நிலையில், நீங்கள் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான நேரமாக இருக்கலாம்!

அறிமுகமாகும் போது சாம்சங் கேலக்ஸி A53 5ஜி மாடல் ஆனது சேமிப்புத்திறன்களில் வெளியானது. ஆச்சரியமாக அந்த இரண்டுமே விலைக்குறைப்பை பெற்றுள்ளன. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+128ஜிபி ஆகுல இரண்டுமே ரூ.3,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று உள்ளன.

பழைய விலை VS புதிய விலை:

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+128ஜிபி மாடல்கள் முறையே ரூ.34,999 மற்றும் ரூ.35,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது விலை வீழ்ச்சிக்கு பிறகு 6ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.31,999-க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.32,999 க்கும் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் Awesome Black, Awesome Blue, Awesome Peach மற்றும் Awesome White என்கிற 4 நிறத் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை அலசுவதன் மூலம் இந்த போனை வாங்கலாமா என்ற முடிவுக்கு வரலாம். இந்த ஸ்மார்ட்போன் 6.5 அங்குல அளவிலான FHD+ Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் வருகிறது. மேலும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் பாதுகாக்கப்படுகிறது.

சிப்செட்? ஸ்டோரேஜ்?

இந்த மிட்-ரேன்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 ப்ராசஸர் மற்றும் 6ஜிபி / 8ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜும் உள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

கேமராக்கள்

சாம்சங் Galaxy A53 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த Samsung One UI 4.1 மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 64MP முதன்மை சென்சார் + 12MP அல்ட்ரா-வைட் கேமரா + 5MP டெப்த் சென்சார் + 5MP மேக்ரோ கேமரா என்கிற நான்கு பின்பக்க கேமராக்களைக் கொண்டு இருக்கிறது. முன்பக்கத்தில் 32 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

பேட்டரி மற்றும் இதர அம்சங்கள்

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் Dolby Atmo- ஆல் டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஆனது IP67 மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது தண்ணீரை “எதிர்க்கும்” திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரியையும் கொண்டு இருக்கிறது. இது வெறும் 30 நிமிடங்களில், ஸ்மார்ட்போனை 50% வரை சார்ஜ் செய்கிறது.

யாரெல்லாம் வாங்கலாம்?

நல்ல விஷயங்களை பற்றி பேசும் போது, மிகவும் தெளிவான 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, உயர்தர ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், IP67 மதிப்பீடுமற்றும் நல்ல டேலைட் கேமரா செயல்திறன் போன்றவைகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதே போல குறைகளைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட ப்ளோட்வேர், சராசரியான லோ-லைட் கேமரா செயல்திறன் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.