
சாம்சங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் அம்சங்கள் புளூடூத் SIG தரவுத்தளத்தில் காணப்பட்டது. இதன் மாடல் எண்கள் கூட வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்பிளே
இணையத்தில் கசிந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் ஆனது 6.8 அங்குல எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கூடவே 2408 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா
சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவர இருக்கிறது. அதேபோல் செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப் நாச்சைக் கொண்டிருக்கிறது இந்த சாம்சங் போன். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
சிப்செட்
சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சாம்சங் 5ஜி போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மெமரி
4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு விதங்களில் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் இருக்கிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
பேட்டரி
அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ14 போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டி
ரூ.20,000-க்குள் டூயல் சிம், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த போன் இந்தியாவில் ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Android 13 அடிப்படையிலான One UI 5.0 அப்டேட்-ஐ பெற்றுள்ளது. இந்த புதிய அப்டேட் டிசம்பர் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே கிடைத்துவிட்டது.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாடுகளில் உள்ள கேலக்ஸி ஏ53 5ஜி பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.