4+3GB ரேம், 5000mAh பேட்டரியோடு ரூ.9,299க்கு வெளியான லாவா ப்ளேஸ் NXT!

லாவா ப்ளேஸ் NXT தற்போது இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. இது சில மாதங்களுக்கு முன் வெளியான லாவா ப்ளேஸ் 4ஜி மொபைலின் மேம்பட்ட பதிப்பாக வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கும் ஏறத்தாழ லாவா ப்ளேஸ் 4ஜி மொபைல் போன்றே இருக்கிறது.

இந்த் போனில் மீடியாடெ ஹீலியோ ஜி37 ப்ராசஸர், 4ஜிபி ரேம், 3ஜிபி விர்ச்சுவல் ரேம், 5000mAh பேட்டரி போன்றவற்றை இதன் முக்கிய அம்சங்களாகக் கூறலாம். இதன் மற்ற விவரங்கள் மற்றும் விலை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விலை

இந்த லாவா ப்ளேஸ் NXT மொபைலுக்கு ரூ 9,299 என்ற விலையை லாவா நிறுவனம் நிர்ணயித்து இருக்கிறது. மேலும் இந்த மொபைல் பச்சை மற்றும் சிகப்பு ஆகிய நிறங்களில் வெளியாகி உள்ளது.

எங்கு கிடைக்கும்

இப்போது வரை இந்த மொபைல் எப்போது விற்பனைக்கு வரும் என்ற விவரத்தை லாவா நிறுவனம் அறிவிக்க வில்லை. ஆனால், இந்த மொபைல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. அமேசான் தளத்தில் இந்த மொபைல் அதன் முழு அம்சங்களுடன் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

டிஸ்ப்ளே

இந்த லாவா ப்ளேஸ் NXT மொபைல் 6.5 அங்குல HD plus IPS டிஸ்ப்ளெவைக் கொண்டுள்ளது. இந்த போனின் பின்பக்கத்தில் க்ளாஸ் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

சிப்செட் & இயங்குதளம்

முன்பே கூறியதுபோல் இந்த லாவா ப்ளேஸ் NXT மொபைலில் MediaTek Helio G37 ப்ராஸசர் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது.

மெமரி

இந்த போனில் 4 ஜிபி பிசிகல் ரேம் மற்றும் 3 ஜிபி விர்சுவல் ரேம் என 7 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 64ஜிபி சேமிப்புத்திறன் (internal memory) வழங்கப்பட்டு இருக்கிறது. சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள ஒரு மைக்ரோ SD கார்டு ஸ்லாட் இருக்கிறது. அதில் மைக்ரோ SD கார்டை பயன்படுத்தி சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

கேமரா

புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க இந்த லாவா ப்ளேஸ் NXT மொபைலின் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. இதுவே முதன்மை கேமராவாக இருக்கிறது. இது தவிர இன்னும் இரண்டு கேமராக்கள் பின்பக்கத்தில் வழங்கப்பட்டு உள்ளன. ஆனால், மற்ற இரண்டு கேமராக்களைப் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரம் மொபைலின் முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 8 மெகா பிக்சல் கேமரா ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இதனோடு LED ப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது.

பேட்டரி

இந்த போன் 5000mAh பேட்டரியோடு வருகிறது. இந்த விலைக்கு இந்த பேட்டரி மிகவும் லாபகரமான விஷயம். திறன் மிகுந்த பேட்டரி என்பதால் தாராளமாக நாள் முழுவதும் சார்ஜ் நிற்கும். போனின் செக்யூரிட்டிக்காக இந்த மொபைலில் பிங்கர் பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டி

இந்த போன் ஒரு 4G மொபைல் ஆகும். இதில் 4G VoLTE, dual band Wi-Fi, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜாக் போன்ற பலவிதமான கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. இந்த போன் 8.28மிமீ தடிமனையும், 178 கிராம் எடையையும் கொண்டுள்ளது.