Home News ரூ 7,799க்கு லாவாவின் புதிய பட்ஜெட் போன் யுவா ப்ரோ

ரூ 7,799க்கு லாவாவின் புதிய பட்ஜெட் போன் யுவா ப்ரோ

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் என்றாலே அது வசதிகள் இன்றித்தான் இருக்கும் என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது! இப்போதெல்லாம் ரூ.8,000 – ரூ.12,000 க்குள் கிடைக்கும் போன்கள் சிறந்த வசதிகளோடு வருகின்றன.

அப்படி பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் போன் தான் ’லாவா யுவா ப்ரோ’ (Lava Yuva Pro) ஆகும். ரூ.8,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் விலையை மீறிய அம்சங்களை கொண்டு இருக்கிறது என்றே கூறலாம்! அதென்ன அம்சங்கள்? இந்த ஸ்மார்ட்போனை எங்கே வாங்கலாம்? விரிவாக பார்க்கலாம்!

விலை
லாவா யுவா ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் ஸ்டோரேஜின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 3ஜிபி ரேம் + 32ஜிபி ஆகும்; இதன் விலை ரூ.7,799 ஆகும். இது மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் மெட்டாலிக் கிரே என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்போது இந்த மொபைல் லாவா இ-ஸ்டோர் (Lava e-store) வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்ப்ளே
உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா இன்டர்நேஷனலின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன யுவா ப்ரோ, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 720×1,600 பிக்சல்களை வழங்கும் 6.51 அங்குலம் என்கிற அளவிலான HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பைக் கொண்டுள்ளது கூடவே செல்ஃபி கேமராவுக்காக வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்சையும் கொண்டுள்ளது!

ப்ராசஸர் & OS
இந்த புதிய Lava ஸ்மார்ட்போன் ஆனது MediaTek Helio SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மேலும் இது 3GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட லாவா யுவா ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.

கேமரா!
கேமராக்களை பொறுத்தவரை, லாவா யுவா ப்ரோ ஆனது எல்இடி ப்ளாஷ் கொண்ட 13-மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. இதன் ரியர் கேமரா செட்டப்பில், HDR, போர்ட்ரெய்ட், ப்யூட்டி, நைட், GIF மற்றும் டைம்லாப்ஸ் போட்டோகிராஃபி உள்ளிட்ட கேமரா மோட்கள் மற்றும் பில்டர்கள் உள்ளன. செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ சாட்களுக்கு, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது; அது ஸ்கிரீன் ஃபிளாஷ் ஆதரவையும் பெறுகிறது.

ஸ்டோரேஜ்!
இந்த லாவா ஸ்மார்ட்போனில் 32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. அதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்.

செக்யூரிட்டி!
இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வருகிறது இது தவிர பேஸ் அன்லாக் (Face unlock) அம்சத்தையும் கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி

Lava Yuva Pro ஆனது 4G, ப்ளூடூத் v5, எஃப்எம் ரேடியோ, வைஃபை 802.11 b/g/n/ac, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஆர்எஸ், ஓடிஜி மற்றும் யூஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரி!
லாவா நிறுவனம் அதன் புதிய யுவா ப்ரோ ஸ்மார்ட்போனில் 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை வழங்கி இருக்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரி 37 மணிநேர டாக் டைமையும், சிங்கிள் சார்ஜில் 320 மணிநேரம் வரை ஸ்டேன்ட்பை டைமையும் வழங்கும். கடைசியாக, அளவீட்டில் இது 164.4×75.8×8.9மிமீ மற்றும் எடையில் 191 கிராமும் உள்ளது.
பட்ஜெட் விலை, 3 கலர் ஆப்ஷன்கள், விலையை மீறிய டிசைன், பெரிய டிஸ்பிளே, நல்ல ப்ராசஸர், தேவைக்கான கேமரா, போதுமான ஸ்டோரேஜ், நல்ல செக்யூரிட்டி, பெரிய பேட்டரி.. இப்படியாக ரூ.7.799 க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்க பல காரணங்கள் உள்ளன!