
என்னதான் லாபகரமாக இருந்தாலும் பெரும்பாலானோர் சிறிய ரீசார்ஜ்களையே செய்கின்றனர். அதாவது 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையிலான வேலிடிட்டி இருக்கும் திட்டங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். எனவேதான் எல்லா நிறுவனங்களும் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களை சலுகைகளுடன் வழங்குகின்றன. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தற்போது பல நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டது. கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ள குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.
ரூ.155 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் ரூ.155 திட்டமானது பயனர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் நிமிடங்களை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. கூடுதலாக, பயனர்களுக்கு Wynk Music மற்றும் Free Hellotunes போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது. ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்துடன் கிடைக்கும் 300 எஸ்எம்எஸ்-க்கு பிறகு, வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் எஸ்எம்எஸ்-க்கு ரூ. 1 என்ற விதத்திலும், எஸ்டிடி எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1.50 எந்த விதத்திலும் வசூலிக்கப்படுவார்கள். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 SMS அனுப்பும் வரம்பு உள்ளது. அதிவேக டேட்டாவிற்கு பிறகு டேட்டா கட்டணம் 50p/MB என வசூலிக்கப்படும். A
ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர Hellotunes மற்றும் Wynk Music இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும்.
ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் Hellotunes, Wynk Music உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்கள் அருமையான சலுகைகளை வழங்குகிறது என்றே கூறலாம்.