2022ஐ கலக்கிய மிட்ரேஞ்ச் போன்கள்!

இன்னும் சில தினங்களில் நாம் 2023 இல் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். அதன்படி 2022 இல் ரூ.25000 விலை பிரிவில் அறிமுகமாகி ஸ்மார்ட்போன் சந்தையை கலக்கிய ஸ்மார்ட்போன்கள் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

ரூ.25,000க்கு கீழ்..

விரைவில் புதிய போன் வாங்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் 2022 இல் ரூ.25,000 கீழ் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன்களைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்

vivo V21e 5G

ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று vivo V21e 5G ஆகும். இதன் விலை ரூ.23,690. இந்த காலக்கட்டத்துக்கு தேவையான 5ஜி ஆதரவு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 64 எம்பி குவாட் ரியர் கேமரா முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேமராவைப் பொறுத்தவரையில் 64 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 32 எம்பி செல்ஃபி ஷூட்டர் ஆதரவு இருக்கிறது. 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. வெறும் 30 நிமிடங்களில் 72 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

iQOO Z6 Pro

ஐக்யூ ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஸ்மார்ட்போன் இது. iQOO Z6 Pro ஸ்மார்ட்போனானது ரூ.22,999 என கிடைக்கிறது. விவோவின் துணை பிராண்டான ஐக்யூ சமீப காலமாகவே கடுமையான வளர்ச்சியை அடைந்து வருகிறது. iQOO Z6 Pro ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் இதில் இருக்கிறது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 1300 நிட்ஸ் உச்ச பிரகாச ஆதரவுடன் 64 எம்பி கேமரா ஆதரவு இதில் இருக்கிறது.

Realme Narzo 50 Pro 5G

Realme Narzo 50 Pro ஸ்மார்ட்போனானது 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 48 எம்பி சென்சார் உடனான நட்சத்திர கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. பகல் நேரத்தில் விரிவான மற்றும் வண்ண துல்லியமான காட்சிகளை பதிவு செய்ய இது ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. வேகமான செயல்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். 90 ஹெர்ட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் இருக்கிறது.

மோட்டோ ஜி82

மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போனானது ரூ.19,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. Moto G82 இன் சிறப்பம்சங்கள் அதன் விலையை விட உயர்ந்ததாக இருக்கிறது. 50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 700 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட 6.6 அங்குல pOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

OnePlus Nord CE 2 5G

ரூ.20,000க்கு கீழ் கிடைக்கும் மற்றொரு சிறந்த ஸ்மார்ட்போன் OnePlus Nord CE 2 5G ஆகும். இது டைமன்சிட்டி 900 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் மூலம் செய்ய முடியும் அனைத்து பணிகளையும் இதில் எளிதாக மேற்கொள்ளலாம். 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 64 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் லென்ஸ் அமைப்பு இதில் இருக்கிறது. 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுல எந்த போனை வாங்கப் போறீங்க?