ஆபத்தான 36 ஆப்கள்!

பலவகையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தும் கூட, கூகுள் நிறுவனத்தால் பிளே ஸ்டோருக்குள் நுழையும் மால்வேர் செயலிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. அந்த வரிசையில் புதிதாக 35 மால்வேர் செயலிகள் சேர்ந்துள்ளன! பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான Bitdefender-இன் கூற்றுப்படி, புதிதாக கண்டறியப்பட்டுள்ள 35 மால்வேர் செயலிகளை இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த மால்வேர்கள் வழக்கம் போல பலரின் தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சிக்கின்றன மற்றும் தேவையற்ற விளம்பரங்களை காட்டுகின்றன.

என்ன செய்யும் இந்த மால்வேர்?

Bitdefender-இன் பிளாக் போஸ்டின் படி, இந்த செயலிகள் தத்தம் பெயர்களையும், ஐகான்களையும் மாற்றிக் கொண்டு ஒரு ஸ்மார்ட்போனில் தன் இருப்பை மறைத்து கொள்கின்றன, பின்னர் ஆக்கிரமிப்பு மிகுந்த கட்டயாமான விளம்பரங்களை வழங்க தொடங்குகின்றன”. எடுத்துக்காட்டுக்கு GPS Location என்கிற ஆப் ஆனது இன்ஸ்டால் செய்யப்பட்டதும், அதன் பெயரை “Settings” என மாற்றுகிறது. அதாவது நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய செயலிகளின் பட்டியலில் இதுபோன்ற மால்வேர் ஆப்களின் பெயர் காட்டப்படாது, இதனால் அவை இயங்குவதை உங்களால் அறிந்துகொள்ள முடியாமல் போகலாம்!

எந்த Category-களில் பரவிக் கிடக்கின்றன!

ஆபத்தான மால்வேர் ஆப்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த செயலிகள் ஜிபிஎஸ், போட்டோ பில்டர்ஸ், வால்பேப்பர்ஸ் என மிகவும் பிரபலமான Categories-களில் பரவி உள்ளன. மேலும் அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான டவுன்லோட்களை பெற்று இருக்கின்றன. ஆண்ட்ராய்டு ஆப்களில் விளம்பரங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன என்றாலும் கூட, இந்த குறிப்பிட்ட மால்வேர் ஆப்கள் அவற்றின் சொந்த Framework-ஐ பயன்படுத்துகின்றன. இதனால் அதை இன்ஸ்டால் செய்திருக்கும் ஸ்மார்ட்போனுக்கு தீங்கு தரும் வேலையைச் செய்கின்றன.

அந்த மால்வேர்களின் பட்டியல்!

1. Walls light – Wallpapers Pack
2. Big Emoji – Keyboard
3. Grad Wallpapers – 3D Backdrops
4. Engine Wallpapers – Live & 3D
5. Stock Wallpapers – 4K & HD
6. EffectMania – Photo Editor
7. Art Filter – Deep Photoeffect
8. Fast Emoji Keyboard
9. Create Sticker for Whatsapp
10. Math Solver – Camera Helper
11. Photopix Effects – Art Filter
12. Led Theme – Colorful Keyboard
13. Keyboard – Fun Emoji, Sticker
14. Smart Wifi
15. My GPS Location
16. Image Warp
17. Camera Art
18. Girls Wallpaper HD
19. Cat Simulator
20. Smart QR Creator
21. Colorize Old Photo
22. GPS Location Finder
23. Girls Art Wallpaper
24. Smart QR Scanner
25. GPS Location Maps
26. Volume Control
27. Secret Horoscope
28. Smart GPS Location
29. Animated Sticker
30. Master Personality Charging Show
31. Sleep Sounds
32. QR Creator
33. Media Volume Slider
34. Secret Astrology
35. Colorize Photos
36. Phi 4K Wallpaper – Anime HD

மேற்குறிப்பிட்ட 36 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தாலும் கூட, அதை உடனே அன்இன்ஸ்டால் அல்லது டெலிட் செய்யவும்.

மால்வேரின் நுழைவை தவிர்ப்பது எப்படி?

மால்வேர் செயலிகளால் பாதிக்கப்படுவதை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, நீங்கள் எந்தவொரு ஆப்பையும் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பும், அந்த செயலிக்கு அதிக எண்ணிக்கையிலான டவுன்லோடுகள் மற்றும் விமர்சனங்கள் இல்லை எனில் அதைத் தவிர்த்து விடவும்! – எக்கச்சக்கமான அனுமதிகளை கேட்கிறதா? – அதை இன்ஸ்டால் செய்வதை தவிர்த்து விடவும் (ஏனெனில் பிற ஆப்களை ஈர்க்கும் திறன் கொண்ட மால்வேர் ஆப்கள் தான் எக்கச்சக்கமான பெர்மிஷன்களை கேட்கும்) – கூகுள் பிளே ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான இடம் தான். ஆனாலும், நீங்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.