அமேசான் போலவே ஃப்ளிப்கார்ட்டும் சிறப்பு விற்பனையை மேற்கொள்ள இருக்கிறது. Big Saving Days என்ற பெயரில் இந்த மாதம் 15 முதல் 19 வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் நிறைய சலுகைகளும், தள்ளுபடியும் வழங்கப்படும். ஆடை, வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட எல்லா பிரிவைச் சேர்ந்த பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டாலும் மொபைல் வாங்குவதற்கு இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் உண்மையாகவே சில நல்ல சலுகைகளை ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்கள் இந்த சிறப்பு விற்பனையின் போது வழங்குகின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
OPPO Reno10 Pro
இந்த மொபைலின் 12GB RAM+ 256GB ROM வேரியண்ட் தற்போது ரூ. 39,999 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. இந்த மொபைலை ஃப்ளிப்கார்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ரூ. 4000 தள்ளுபடியில் ரூ. 35,999 என்ற விலையில் வாங்க முடியும். 17.02 cm (6.7 inch) Full HD+ டிஸ்ப்ளே, 50MP + 32MP + 8MP பின்பக்க கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 4600mAh பேட்டரி, Snapdragon 778G 5G சிப்செட் போன்ற அம்சங்களுடன் இந்த மொபைல் வெளியாகி உள்ளது.
Infinix Note 30 5G
இந்த மொபைலின் 8GB RAM + 256GB ROM வேரியண்ட் தற்போது ரூ. 15,999 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. இந்த மொபைலுக்கு Flipkart Big saving Days சிறப்பு விற்பனையின் போது ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இந்த மொபைலை ரூ. 14,999 என்ற விலைக்கு வாங்க முடியும். 17.22 cm (6.78 inch) Full HD+ டிஸ்ப்ளே, 108 MP + 2 MP+ AI Lens உடன் கூடிய பின்பக்கக் கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 5000mAh Li-ion Polymer பேட்டரி, Dimensity 6080 சிப்செட், 2TB வரை சேமிப்புத்திறனை Micro SD மூலம் அதிகரித்துக் கொள்ளும் வசதியோடு இந்த மொபைல் வெளியாகி உள்ளது.
MOTOROLA Edge 40
இந்த மொபைலின் 8GB RAM + 256GB ROM வேரியண்ட் தற்போது ரூ. 29,999 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. சிறப்பு விற்பனையின் போது இந்த மொபைலுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த மொபைலை ரூ.27,999 என்ற விலைக்கு வாங்க முடியும். 16.64 cm (6.55 inch) Full HD+ டிஸ்ப்ளே, 50MP + 13MP | 32MP முன்பக்க கேமரா, 4400mAh பேட்டரி, Dimensity 8020 சிப்செட் போன்ற அம்சங்களுடன் இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது.
SAMSUNG Galaxy F54 5G

இந்த மொபைலின் 8GB RAM + 256GB ROM வேரியண்ட் தற்போது ரூ. 29,999 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. சிறப்பு விற்பனையின் போது இந்த மொபைலுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த மொபைலை ரூ.27,999 என்ற விலைக்கு வாங்க முடியும். 17.02 cm (6.7 inch) Full HD+ டிஸ்ப்ளே, 108MP + 8MP + 2MP பின்பக்க கேமரா, 32MP செல்ஃபி கேமரா, 6000mAh பேட்டரி, Octa Core சிப்செட் போன்ற அம்சங்களுடன் இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது.
இவை தவிர POCO C55 மொபைலுக்கு ரூ.250, realme 11 Pro 5G மொபைலுக்கு ரூ.1000, Redmi Note 12 Pro 5G மொபைலுக்கு ரூ.3,500 அளவில் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. சிறந்த மொபைலை தள்ளுபடியில் வாங்க நினைப்பவர்கள் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம்.









