மொபைலில் என்னதான் GB கணக்கில் RAM, TB கணக்கில் சேமிப்புத்திறன் இருந்தாலும் அந்த மொபைலை சிறப்பானது என்று சொல்ல வேண்டுமானால் அதன் டிஸ்ப்ளே நன்றாக இருக்க வேண்டும். அதனால் தான் விலை உயர்ந்த ஃப்ளாக்ஷிப் மொபைல்கள் பேட்டரி, இண்டர்னல் ஸ்பேஸ் போன்றவற்றை விட டிஸ்ப்ளேவுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.
டிஸ்ப்ளேவில் TFT, LCD, LED, AMOLED, Super AMOLED, ரெட்டினா என பலவகையான டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இதில் TFT வகை குறைந்த விலை டிஸ்ப்ளே குறைந்த விலை மொபைல்களிலும், LED வகை டிஸ்ப்ளே மிட்-ரேஞ்ச் வகை மொபைல்களிலும், AMOLED, ரெட்டினா வகை டிஸ்ப்ளேக்கள் விலை உயர்ந்த மொபைல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது இந்த AMOLED டிஸ்ப்ளே ஒருசில குறைந்த விலை மொபைல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. போட்டி நிறுவனங்களின் மொபைல்களில் இருந்து தங்களது மொபைல்களை தனித்துக் காட்ட மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இவ்வாறு செய்கின்றன. இது பயனர்களான நமக்கு நல்லது தான். அப்படி ரூ.15,000க்குள் வெளியான மொபைல்களில் Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் மொபைல்களின் பட்டியலையும் அவற்றில் இருக்கும் பிற வசதிகளையும் இப்போது பார்க்கலாம்.
ரூ.15,000க்குள் Super AMOLED டிஸ்ப்ளேவோடு வெளியான மொபைல்கள்
- realme 10
- POCO X5
- Redmi Note 12 4G
- Redmi Note 11 SE
- Realme 10
- Samsung Galaxy M32
- Samsung Galaxy M21 2021
- Redmi Note 10
- Samsung Galaxy F22
- Samsung Galaxy M32 Prime edition
இந்த மொபைல் MediaTek Helio G99 சிப்செட், 4GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.4 அங்குல, 90Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவோடு கூடிய இரட்டைக் கேமராவும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரியும் 33W Super VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விலை: ரூ.11,499
இந்த மொபைல் Snapdragon 695 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.67 அங்குல, 120Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 48MP முதன்மை கேமராவோடு கூடிய மூன்று கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரியும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விலை: ரூ.14,999
இந்த மொபைல் Snapdragon 685 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.67 அங்குல, 120Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 50MP முதன்மை கேமராவோடு கூடிய மூன்று கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரியும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விலை: ரூ.13,999
இந்த மொபைல் MediaTek Helio G95 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.43 அங்குல, 90Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 64MP முதன்மை கேமராவோடு கூடிய நான்கு கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 512 GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரியும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விலை: ரூ.13,144
இந்த மொபைல் MediaTek Helio G80 சிப்செட், 4GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.4 அங்குல, 90Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 64MP முதன்மை கேமராவோடு கூடிய நான்கு கேமராக்களும், முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை1 TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 6000mAh பேட்டரியும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விலை: ரூ.13,499
இந்த மொபைல் Samsung Exynos 9 Octa 9611 சிப்செட், 4GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.4 அங்குல, 48Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 64MP முதன்மை கேமராவோடு கூடிய மூன்று கேமராக்களும், முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 6000mAh பேட்டரியும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விலை: ரூ.11,399
இந்த மொபைல் Snapdragon 678 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.43 அங்குல, 60Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 48MP முதன்மை கேமராவோடு கூடிய நான்கு கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 5000mAh பேட்டரியும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விலை: ரூ.13,999

இந்த மொபைல் MediaTek Helio G80 சிப்செட், 6GB RAM உடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.4 அங்குல, 90Hz Refresh rate உடன் கூடிய Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 48MP முதன்மை கேமராவோடு கூடிய நான்கு கேமராக்களும், முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இதில் 6000mAh பேட்டரியும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
விலை: ரூ.14,990













