

தற்போது வெளியாகும் மொபைல்கள் அளவில் பெரியதாகவும், அதிக திறன் வாய்ந்ததாகவும் இருக்கின்றன. பெரும்பாலான மொபைல்கள் 5ஜி மொபைலாகவும் வெளிவருகின்றன. இதனால் இந்த மொபைல்களுக்கு அதிக அளவிலான சக்தியும் தேவைப்படுகிறது. எனவே மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக திறன் கொண்ட பேட்டரியோடு மொபைலை வெளியிடுகின்றன. அதிக திறன் இருப்பதால் அவை விலை உயர்ந்த மொபைலில் தான் இடம்பெறும் என்பதும் சமீபத்தில் பொய்த்துப் போய் இருக்கிறது. வெறும் ரூ.7,500 விலைக்கு வெளியாகும் Infinix Smart 7 போன்ற பட்ஜெட் மொபைலில் கூட 6000mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இப்படி ரூ 7,500 முதல் வெளியாகும் மொபைல்களையும் அதன் வசதிகளையும் இப்போது பார்க்கலாம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விலையில் மாற்றங்கள் இருக்கலாம்.
6000mAh பேட்டரியோடு வரும் மொபைல்களின் பட்டியல்
- Samsung Galaxy M32 Prime Edition
- Tecno Pova Neo 5G
- Samsung Galaxy M33 5G
- Samsung Galaxy M13
- Tecno Pova 4
- Samsung Galaxy F13
- Infinix Hot 20 Play
- Infinix Smart 7
Samsung Galaxy M32 Prime Edition
https://www.91mobiles.com/samsung-galaxy-m32-prime-edition-128gb-price-in-india
இந்த மொபைலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 ப்ராஸசர் இருக்கிறது. இதில் 6ஜிபி ரேம், 64MP உட்பட 4 பின்பக்க கேமராக்கள், 20MP முன்பக்க கேமரா ஆகியவை உள்ளன. 90Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் 6.4 அங்குல Super AMOLED டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டுள்ளது. 4ஜி மொபைலான இதில் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்கும் இந்த மொபைல் ரூ.15,499க்கு கிடைக்கிறது
Tecno Pova Neo 5G
https://www.91mobiles.com/tecno-pova-neo-5g-price-in-india
இண்டஹ் மொபைல் மீடியாடெக் டைமெண்சிட்டி 810 சிப்செட்டில் இயங்குகிறது. 50MP முதன்மை கேமரா, 8MP செல்ஃபி கேமராவோடு வெளியாகும் இந்த மொபைலில் 4ஜிபி ரேம், 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. 5ஜி மொபைலான இந்த போவா நியோ 5ஜி ஆண்ட்ராய்டு 12ல் இயங்குகிறது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் 6.8 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டுள்ளது. இந்த மொபைல் ரூ.15,499க்கு விற்பனையாகிறது.
Samsung Galaxy M33 5G
https://www.91mobiles.com/samsung-galaxy-m33-5g-price-in-india
ஆண்ட்ராய்டு 12ல் வெளியாகும் இந்த மொபைலுக்கு ஆண்ட்ராய்டு 14 வரைக்கான அப்டேட்கள் இலவசமாகக் கிடைக்கும். சாம்சங்கின் Exynos 1280 சிப்செட்டில் உருவான இந்த மொபைலில் 50MP முதன்மை கேமரா உட்பட பின்பக்கத்தில் 4 கேமராக்களும் முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும் உள்ளன. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் 6.6 அங்குல TFT டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டுள்ளது. 6ஜிபி ரேம், 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ள இந்த 5ஜி மொபைல் ரூ.15,499க்கு கிடைக்கிறது.
Samsung Galaxy M13
https://www.91mobiles.com/samsung-galaxy-m13-128gb-price-in-india
சாம்சங்கின் Exynos 850 சிப்செட்டில் வெளியான இந்த 4ஜி மொபைல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. 6.6 அங்குல PLS LCD டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த மொபைல் 50MP முதன்மை கேமராவோடு கூடிய 3 பின்பக்க கேமராக்களையும், 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் ரூ.12,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது.
Tecno Pova 4
https://www.91mobiles.com/tecno-pova-4-price-in-india
மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் இருக்கும் இந்த 4ஜி மொபைலில் 8ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 90Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.82 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டு இருக்கிறது. 50MP முதன்மை கேமரா, 8MP செல்ஃபி கேமராவோடு வரும் இந்த மொபைல் ரூ.11,999 என்ற விலைக்கு விற்பனையாகிறது.
Samsung Galaxy F13
https://www.91mobiles.com/samsung-galaxy-f13-price-in-india
சாம்சங்கின் Exynos 850 சிப்செட்டில் வெளியான இந்த 4ஜி மொபைல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. 6.6 அங்குல PLS LCD டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த மொபைல் 50MP முதன்மை கேமராவோடு கூடிய 3 பின்பக்க கேமராக்களையும், 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் ரூ.9,699 என்ற விலைக்குக் கிடைக்கிறது.
Infinix Hot 20 Play
https://www.91mobiles.com/infinix-hot-20-play-price-in-india
மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட்டில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் உருவாகி இருக்கும் இந்த மொபைல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டிருக்கிறது. 90Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.82 அங்குல IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த மொபைல், 13MP முதன்மை கேமராவையும், 8MP முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. இந்த 4ஜி மொபைல் ரூ8,499க்கு விற்பனையாகிறது.
Infinix Smart 7
https://www.91mobiles.com/infinix-smart-7-price-in-india
6000mAh பேட்டரியோடு வெளியாகும் விலை குறைந்த மொபைல் இதுவாகும். இதில் Unisoc SC9863A என்ற சிப்செட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 4ஜிபி ரேம், 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் வெளியாகும் இந்த 4ஜி மொபைல் 13MP முதன்மை கேமராவையும், 5MP முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. 6.6 அங்குல IPS LCD டிஸ்ப்ளேவோடு ரூ.7,499 ரூபாய்க்கு விற்பனையாகிறது.













