
மொபைலில் கேமரா வசதி இருந்த காலம் போய், கேமரா வசதிக்காகவே மொபைல் வாங்கும் காலம் வந்துவிட்டது என்றே சொல்லலாம். அப்படி தொழிற்முறை கேமராக்களில் (Professional camera) இருக்கும் வசதிகளை மொபைலில் இருக்கும் கேமராவுக்கும் மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. மொபைலின் Selling Pointல் அதன் கேமரா வசதிகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதனையடுத்து பல Camera Centric மொபைல்களும் வந்தபடி உள்ளன. மொபைல் கேமராக்களின் மெகாபிக்சல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
அதுமட்டுமின்றி பரந்த நிலப்பரப்புகளை எடுப்பதற்கேற்ப Wide angle லென்ஸ், மனிதர்களை சிறந்த முறையில் புகைப்படம் எடுக்க போர்ட்ரேட் லென்ஸ், பூக்கள், சிறு பூச்சிகள் போன்றவற்றை எடுக்க மேக்ரோ லென்ஸ், எடுக்கும் புகைப்படங்களில் சிறந்த ‘Depth’-ஐ வழங்க Depth lens என பல வகையான லென்சுகளைக் கொண்ட பல எண்ணிக்கையிலான கேமராக்களோடு தற்போதைய மொபைல்கள் வெளிவருகின்றன. இதில் சிறப்பு என்னவென்றால். இத்தகைய வசதிகளைக் கொண்ட மொபைல்கள் குறைந்த விலை மொபைல்களிலும் கிடைக்கின்றன. அப்படி ரூ.12,000 விலைக்குள் கிடைக்கும் மொபைல்களில் பின்பக்கத்தில் Quad camera என சொல்லக்கூடிய 4 கேமராக்களைக் கொண்ட மொபைல்களின் பட்டியலைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
ரூ.12,000 விலைக்குள் நான்கு கேமராக்களோடு வெளியாகும் மொபைல்களின் பட்டியல்
- Moto G30
- Samsung Galaxy M12
- Tecno Pova 2
- Moto G22
- Moto G10 Power
- Xiaomi Redmi 10 Prime 2022
- Nokia G20
MediaTek Helio G88 சிப்செட்டில் வெளியான இந்த மொபைல் 6.5 அங்குல IPS LCD டிஸ்ப்ளே உள்ளது. இது 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும் கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 50+8+2+2MP கேமராக்களையும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இதில் 4GB RAM, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை 512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த 4G மொபைலில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
விலை: ரூ. 10,999
Samsung Exynos 8 Octa 850 சிப்செட்டில் வெளியான இந்த மொபைல் 6.5 அங்குல TFT LCD டிஸ்ப்ளே உள்ளது. இது 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும் கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 48+5+2+2MP கேமராக்களையும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இதில் 4GB RAM, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த 4G மொபைலில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
விலை: ரூ. 11,999
MediaTek Helio G85 சிப்செட்டில் வெளியான இந்த மொபைல் 6.5 அங்குல IPS LCD டிஸ்ப்ளே உள்ளது. இது 60Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும் கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 48+2+2+2MP கேமராக்களையும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இதில் 4GB RAM, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை 256GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த 4G மொபைலில் 7000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
விலை: ரூ. 10,499
MediaTek Helio G37 சிப்செட்டில் வெளியான இந்த மொபைல் 6.5 அங்குல IPS LCD டிஸ்ப்ளே உள்ளது. இது 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டையும் கொண்டுள்ளது. பின்பக்கத்தில் 50+8+2+2MP கேமராக்களையும், முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இதில் 4GB RAM, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த 4G மொபைலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
விலை: ரூ. 10,999
MediaTek Helio G88 சிப்செட்டில் வெளியான இந்த மொபைல் 6.5 அங்குல IPS LCD டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 50+8+2+2MP கேமராக்களையும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இதில் 4GB RAM, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை 512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த 4G மொபைலில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
விலை: ரூ. 10,999
Snapdragon 460 சிப்செட்டில் வெளியான இந்த மொபைல் 6.5 அங்குல IPS LCD டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 48+8+2+2MP கேமராக்களையும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இதில் 4GB RAM, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த 4G மொபைலில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
விலை: ரூ. 10,999
MediaTek Helio G35 சிப்செட்டில் வெளியான இந்த மொபைல் 6.5 அங்குல IPS LCD டிஸ்ப்ளே உள்ளது. பின்பக்கத்தில் 48+5+2+2MP கேமராக்களையும், முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இதில் 4GB RAM, 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை 512GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த 4G மொபைலில் 5050mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
விலை: ரூ. 11,799












