Amazon நிறுவனத்தின் Prime day சிறப்பு விற்பனை வரும் 15, 16 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையை முன்னிட்டு புதிய சில மொபைல்கள் வெளியாக உள்ளன. நிறைய மொபைல்கள் தள்ளுபடியை பெற இருக்கின்றன. மொபைலுக்கு வழங்கப்பட இருக்கும் தள்ளுபடிகள், சலுகைகள், எந்தெந்த மொபைல்கள் தள்ளுபடியை பெற இருக்கின்றன போன்ற விவரங்கள் இப்போதே அமேசான் இணைய தளத்தில் வெளிவரத் துவங்கி விட்டன. நீங்கள் ஏதேனும் மொபைல் வாங்க நினைத்திருந்தால் அந்த மொபைல் தள்ளுபடி பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அல்லது ஏதேனும் புதிய மொபைல் வாங்க நினைத்திருந்தால் தள்ளுபடி கிடைக்கும் மொபைல்களை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவும் இந்த கட்டுரை உதவியாய் இருக்கும்.
Oneplus Nord 3
இந்த சிறப்பு விற்பனையில் மக்கள் அதிக ஆர்வமுடன் இருப்பது Oneplus நிறுவனத்தின் Nord 3 5G மொபைலுக்காக என்று அமேசான் குறிப்பிட்டுள்ளது. இந்த மொபைல் இந்த சிறப்பு விற்பனையின் போதே ரிலீஸ் ஆக இருக்கிறது. Flagship-grade IMX890 கேமரா சென்சார், MTK 9000 Flagship-grade சிப்செட், 80W SUPERVOOC fast-charging, 6.74“ அளவிலான 120Hz AMOLED Display போன்ற முக்கியமான அம்சங்களுடன் வெளியாக இருக்கிறது இந்த நோர்ட் 3 5ஜி மொபைல். ரூ.33,999 விலையில் அறிமுகமாக இருக்கும் இந்த மொபைல், Prime day விற்பனையை முன்னிட்டு ரூ.1000 தள்ளுபடியையும் பெற இருக்கிறது. எனவே இதை ரூ.32,999க்கு வாங்க முடியும்.
Samsung Galaxy M34 5G
சமீபத்தில் அமேசானில் அதிகம் வாங்கப்பட்ட மொபைல் என அமேசான் இந்த Samsung Galaxy M34 5G மொபைலை குறிப்பிடுகிறது. 120Hz sAMOLED டிஸ்ப்ளே, 50MP Triple No Shake கேமரா, 6000mAh பேட்டரி, RAM Plus வசதி மூலம் 12GB வரையிலான RAM போன்ற முக்கிய அம்சங்களோடு இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது. தற்போது ரூ. 18,999 என்ற விலையில் விற்பனையாகி வரும் இதன் 6GB வேரியண்ட், Prime Day விற்பனையில் ரூ.2000 தள்ளுபடி போக, ரூ.16,999 என்ற விலைக்குக் கிடைக்கும்.
Realme Narzo 60 Pro
இந்த மொபைல் கடந்த 6ஆம் தேதி வெளியானது. இதன் விற்பனை வரும் 14ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இப்போது இதற்கான Pre-booking நடந்து வருகிறது. MediaTek Dimensity 7050 சிப்செட், 8 GB RAM, 128 GB ROM, 17.02 cm (6.7 inch) OLED டிஸ்ப்ளே, 100MP ப்ரைமரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 5000mAh போன்ற முக்கிய அம்சங்களுடன் வெளியாகி இருக்கும் இந்த மொபைலின் தற்போதைய விலை ரூ.23,999. இதை அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது ரூ.1500 தள்ளுபடியில், ரூ.22,499 என்ற விலைக்கு வாங்க முடியும்.
iQOO Neo 7 Pro 5G
இந்த மொபைல் கடந்த 4ஆம் தேதி வெளியானது. Snapdragon® 8+ Gen 1 சிப்செட், கேமிங்கிற்கு என தனியான சிப்செட், 6.78-inch டிஸ்ப்ளே, 16MP செல்ஃபி கேமரா, 50MP + 8MP + 2MP என மூன்று பின்பக்க கேமரா, 8GB-128GB, 12GB-256GB என இரண்டு வேரியண்ட்கள், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது. ரூ.34,999 என்ற விலையில் தற்போது ப்ரீ புக்கிங்கில் இருக்கும் இந்த மொபைலின் 8GB-128GB வேரியண்டை அமேசான் Prime day saleல் ரூ. 2000 தள்ளுபடியோடு, ரூ.32,999 என்ற விலையில் வாங்கலாம்.
Tecno Camon 20 Premier 5G

இந்த மொபைல் அமேசான் ப்ரைம் டே துவங்கும் ஜூலை 15 அன்றே அறிமுகமாக இருக்கிறது. தற்போது இதற்கான ப்ரீ புக்கிங் நடைபெற்று வருகிறது. 8GB பிசிகல் ரேம் உடன் 8GB Expandable RAM வசதி, Industry 1st 50MP RGBW-Pro கேமரா, Segment 1st 108MP Ultra-Wide மேக்ரோ லென்ஸ், 6.67″ அளவிலான 120Hz, 10bit AMOLED டிஸ்ப்ளே போன்ற சிறப்பு அம்சங்களோடு வெளியாக இருக்கிறது இந்த மொபைல். ரூ. 29,999 என்ற விலையில் அறிமுகமாக இருக்கும் இந்த போனை ப்ரைம் டே சிறப்பு விற்பனையில் ரூ.1000 தள்ளுபடி போக, ரூ.28,999 என்ற விலைக்கு வாங்க முடியும்.










